ஒரு பட்டையான பதனிடப்பட்ட மரக்குச்சி - அது சொருகப்பட்ட சுவையூட்டப்பட்ட
பனிக்கட்டி !! "குச்சி
ஐஸ்" (popsicle) ஏதோ சாதாரண உணவல்ல ! அது ஒரு எமோஷன்.
சுமார் 50 ஆண்டுகள் முன் - எல்லா பள்ளிக்கூடங்கள் வாசலிலும், சில கடைகள்
இருக்கும். பெருமை வாய்ந்த சிவப்பு வண்ணத்தில் பெரிய கட்டிடம் கொண்ட ஹிந்து உயர்நிலை பள்ளி வாயிலில் - ஒரு தள்ளுவண்டி (கன்னியப்பன் !) - அதில் மாங்காய் பத்தைகள்,
இலந்தை பழம், கொய்யா, புளியங்காய், கொரக்காய்ப்புளி என பல உணவு வகைகள்,
இன்னமொரு வண்டியில், கம்மர்கட், தேங்காய் பர்பி, எள்ளுருண்டைகள், விதவிதமான சக்கரையாலான
இனிப்புகள், சில நாட்கள், சக்கரை வாட்ச் - ஒரு பெரிய கொம்பில், பொம்மையுடன், நாலைந்து
வண்ணங்களை கலவை - அதிலிருந்து, சற்று இனிப்பான மாவை உருவி, கையில் அழகாக, வாட்ச்
போன்று செய்து கட்டி விடுவார்.
எதிரில்
நோட் புத்தகங்கள், பென்சில், பேனா முதல் பல பொருட்கள் விற்கும் செட்டியார்
கடை - பிள்ளையார் கோவில் எதிரில் பன்னீர்சோடா (இவையெல்லாம் பிரீமியர் ஐட்டங்கள்).
மாணவர்கள் அனைவரையும் கவர்ந்தது, அந்நாளில் நாங்கள் ஏங்கிய, விரும்பிய, ஆசைப்பட்ட,
ரசித்த, சந்தோஷமாக பகிர்ந்து கூட உண்டது - 'குச்சி ஐஸ்'. "குச்சி ஐஸ்" ஒரு குளிரூட்டப்பட்ட
இனிப்பு ஆகும், இது பெரும்பாலும் மரக் குச்சியில் செருகப்பட்டிருக்கும். வைரம், ரீட்டா, மக்னோலியா என்று வெவ்வேறு ப்ராண்ட் வண்டிகள். பால் ஐஸ் விட திடமான - ஆரஞ்சு, க்ரேப், மாம்பழ குச்சி ஐஸ்கள்.
தவிர ஐஸ் நடுவே சேமியா, ஜவ்வரிசி பதித்த வகைகளும் உண்டு.
Evert heard of this ice challenge !!! சூரி - வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டா சாப்பிடுவது போலே ஒரு போட்டி. குச்சி ஐஸ் (பால் ஐஸ் சீக்கிரம் உருகிவிடும்) - சிவப்பு நிறம் - நிறைய நேரம் சப்பி சாப்பிடுவது ஒரு இன்பம்.அந்நாளில் குச்சி ஐஸ் ஐந்து காசு ! பால் ஐசோ பத்து காசு ! இந்த குச்சி ஐஸை வாயில் வைத்து ஒரே உறிஞ்சில் அத்தனை வண்ணத்தையும் சாப்பிட்டு விட்டால், கொஞ்சம் வெள்ளை நிற பனிக்கட்டி மட்டுமே மிஞ்சும்.
படிக்க எளிதாக தோன்றினாலும், இது ரொம்ப கஷ்டம். எங்கள் சக மாணவன் நாங்கள் எட்டாம் வகுப்பு படித்த ஓர் நாளில், மதியம் - ஒரு நாலணா போட்டியில், இப்படி ஐஸ் சாப்பிட்டு, பந்தயத்தில் ஜெயித்தான்.
Ice cream comes in a wide variety of types and flavors.
Popular types include traditional ice cream – Vanilla, Chocolate,
butter-scotch, Custard, Strawberry, gelato, frozen yogurt, sherbet
and more. This is more about kuchi-ice, the ones that were sold in front
of schools in small hand-carts. The kuchi-ice (literally ice on stick) was
a great hit of yesteryears and people yearned for them. The cart was more
of a wooden contraption – two wheels containing an icebox inside which
treasures of Pal-ice (milk variety) that would melt immediately and various
forms of kuchi-ice like orange, grape were hidden.
.. .. … and here is a kuchi ice selling vandi, seen at
Triplicane Tank Square market on Saturday (17/1/2026)… interesting !!
19.1.2026

.jpg)
No comments:
Post a Comment