திருவாசகம் - அருட்பத்து - 8.29
--------------
சோதியே சுடரே சூழொளி விளக்கே
.. சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
.. பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
.. நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.

No comments:
Post a Comment