Search This Blog

Sunday, March 17, 2024

Rajahmundry rail bridge in lights ! ~ night view

 Old Rail bridge on sacred river Godavari at Rajamahendravaram



Rail bridge at Rajahmundry

 

Goods train entering old.bridge at Godavari river crossing –

night time at @Rajamahendravaram aka Rajahmundry



the tongue of a Crow

Crows are commonly seen ! – how much do you like them – not sure whether you would relish these photos ! 

ஒரு விடுமுறை நாள் :  ஞாயிறு ...சற்றே !!  சோம்பேறித்தனமாக துவங்கியது .. .. தூக்க கலக்கத்தில் மாடியில் கண்டது காக்கை  - ஒன்று தன் குஞ்சிற்கு சாதம் ஊட்டியது, மற்றொன்று வாயை மிக அகலமாக திறந்து நன் நாக்கையையும் காட்டியது.  கிளிகள், புறாக்கள், குயில்கள், மைனாக்கள், குருவிகள் என பறவைகளை விரும்பும் மனிதர்கள் ஏனோ கரிய நிற காக்கையை விரும்புவதில்லை. 

பராசக்தி திரை படத்தில் ஆர். சுதர்சனம் இசையமைப்பில் உடுமலை நாராயணகவி எழுதிய காக்காய் பற்றிய பாடல்   சிதம்பரம் ஜெயராமன் பாடி சிவாஜி கணேசனின் நடிப்பில் பிரசித்தி பெற்ற பாடலை கேட்டு இருப்பீர்கள்.

 


கா கா கா கா கா கா

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க என்ற

அனுபவப் பொருள் விளங்க – அந்த அனுபவப் பொருள் விளங்க – காக்கை

அண்ணாவே நீங்க அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க

 

உங்களுக்கு காக்கா பிடிக்குமா அல்லது காக்காய் பிடிக்க தெரியுமா ?  தம் வேலையை சாதித்துக்கொள்ள,  ஒருவரை (பல சமயங்களில் மேலாளரை)  அளவுக்கு அதிகமாகப் புகழ்வதைக் காக்கை பிடித்தல்  என்பர். காகம் அல்லது காக்கை (உயிரியல் வகைப்பாடு: Corvus) என்பது கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை - கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இலத்தீன் மொழியில் 'கார்வுச்' என்ற சொல்லுக்கு 'பெரிய உடலமைப்பு கொண்டவை' என்று பொருள். காகங்களில் 40 இனங்கள் உள்ளன.  காக்கையின் அழைப்பைக் கரைதல் என்பர்.  

மாந்தர்களில் நாக்கு அல்லது நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதும் நாக்கே. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும்.

 


கரிநாக்கு என்று  சொல்வதை  கேட்டு இருப்பீர்கள்.  இது கரிய நிறம் நாக்கு அல்ல, கரிநாக்கைக் கொண்டவர்கள் வாயில் நல்லதே வராது;   தீயசொற்கள் சொன்னால் அது பலித்துவிடும் என ஒரு பயம் கலந்த நம்பிக்கை.  மனிதனுடைய நாக்கானது அற்புதமாக மொழிகளை பேச வல்லது.  ஒரு சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதால் எவ்வளவோ தீமைகள் நிகழ்ந்துள்ளன. குடும்பங்கள், உறவுகள் பிரிந்துள்ள.  திருவள்ளுவர் நாவடக்கம் வேண்டும் என்று தனது திருக்குறளில் அறிவுறுத்தியுள்ளார்.  

காக்கை பாடினியார் நச்செள்ளையார் கடைச்சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 12 உள்ளன.  இவரின் பாடல்கள் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.  பதிற்றுப்பத்து ஆறாம்பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய 10 பாடல்கள், இவர் பாடியவை. நச்செள்ளை என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இப்பெயரில் பலர் இருந்த காரணத்தால் காக்கையைப் பாடிய இவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என அழைக்கப்பெற்றுள்ளார். குறுந்தொகையில் இவர் தம் பாடல் ஒன்றில் 'விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே’ என்று குறிப்பிட்டுள்ளமையால் இவரைக் காக்கை பாடினியார் என்று குறிப்பிட்டுள்ளனர். காக்கைக்கு உணவிடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது என்பதற்கு இப்பாடல் சான்று. அக்காக்கைக்கு வைக்கப்படும் சோறு ‘பலி’ எனக்குறிக்கப்பெற்றுள்ளது. காக்கை கத்தும் ஒலியைக் கரைதல் என்றும் இப்பாடல் குறிப்பிடுகிறது. 

Interesting !
 
With regards – S Sampathkumar
17.3.2o24

Saturday, March 16, 2024

Theory of relativity !! ~ இரு கோடுகள்

 

Life is full of comparisons !  Financial targets in life can be met but aspirations can never be ! – even when you earn a lot, one may still aspire more or compare with others thinking that he/she is in a lower position !! 

காசியில் ஜானகியை (சௌகார் ஜானகி) பார்க்கும் கோபிநாத் (ஜெமினி கணேசன்) அவரைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்தை கோபிநாத்தின் தாயார் ஏற்கவில்லை, இதனால் இருவரும் பிரிய நேரிடுகிறது. ஜானகி கர்ப்பமாக இருக்கும்போது கோபிநாத் விலகிவிடுகிறார்.  ஜானகியின் தந்தை  (வி. எஸ். ராகவன்), ஜானகியை மேற்கொண்டு படிக்க வைக்கிறார்.  தமிழ்நாடு திரும்பும் கோபிநாத், ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். தனது முந்தைய திருமணத்தை மறைத்து ஜெயாவை (ஜெயந்தி) திருமணம் செய்து கொள்கிறார். கோபிநாத் பணிபுரியும் அலுவலகத்துக்கு ஒரு புதிய ஆட்சியர் வருகிறார், அது வேறு யாருமல்ல அவரின் முதல் மனைவி ஜானகிதான். 

Heard of Theory of Relativity !!  -  it is a famous theorem of  Albert Einstein, which states that space and time are relative, and all motion must be relative to a frame of reference. It is a notion that states' laws of physics are the same everywhere. This theory is simple but hard to understand. 

The theory of relativity usually encompasses two interrelated physics theories by Albert Einstein: special relativity and general relativity, proposed and published in 1905 and 1915, respectively. Special relativity applies to all physical phenomena in the absence of gravity. General relativity explains the law of gravitation and its relation to the forces of nature. It applies to the cosmological and astrophysical realm, including astronomy. The theory transformed theoretical physics and astronomy during the 20th century, superseding a 200-year-old theory of mechanics created primarily by Isaac Newton.  It introduced concepts including 4-dimensional spacetime as a unified entity of space and time, relativity of simultaneity, kinematic and gravitational time dilation, and length contraction. 

ஒரு பிரச்னையை மறக்க என்ன செய்ய வேண்டும் !  - அமிர்தாஞ்சன் போன்ற தைலங்கள் ஒரு விறுவிறுப்பை உண்டாக்கி மனதை திசை திருப்பி வழியை மறக்க வைக்கின்றன.  ஒரு கோட்டை அழிக்காமலேயே அதை சிறிதாக்க ஓர் வழி உள்ளது.  பக்கத்தில் இன்னொரு பெரிய கோடு வரைந்தால்  !   கற்றது காய் மண்ணளவு என்பர் பெரியோர். ...  அறிவைத் தேடிக்கொண்டே போகின்றான் மனிதன். எவ்வளவு தேடி அறிந்து கொண்டாலும், அவனுக்குத் தெரியாத ஒன்றை மற்றொருவன் தெரிந்து வைத்திருக்கின்றான். இதற்கு முடிவே இல்லை.  வாழ்நாள் முழுதும் கற்றல் நன்றே ! இங்கே மற்றவரை பார்த்து, அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை, நான் எவ்வளவோ மேல் என்ற மனப்பான்மை சரியல்ல !  

இரு கோடுகள் (Iru Kodugal) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்து இருந்தனர்.  இரு பெண்களை மணந்த ஒரு மனிதனைச் சுற்றி இக்கதை நகர்கிறது. இந்த படம்  தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. கன்னடத்தில் எரடு றெக்கேகளு என்றும், தெலுங்கில் கலெக்டர் ஜானகி என்றும், இந்தியில் சன்ஜோக் என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

 


Saturday starts on a holiday mood and some thoughts of “Aasami Sirippu Sinthanaiyan” for posting this photo of two Aeroplanes – one on ground and other just climbing on air !! 

With regards – S Sampathkumar

16.3.2024