Search This Blog

Wednesday, January 21, 2026

நானொரு விளையாட்டு பொம்மையா ??

 

Pallakku bommai !

நானொரு விளையாட்டு பொம்மையா  ??

 


ராகம்: நவரச கானடா

இயற்றியவர் : பாபநாசம் சிவன்

 

நானொரு விளையாட்டு பொம்மையா

ஜகன்நாயகியே உமையே உந்தன்னுக்கு (நானொரு)

 

நானிலத்தில் பல பிறவியெடுத்து

திண்டாடினது போதாதா (தேவி)

( உந்தனுக்கு நானொரு )

 

அருளமுதை பருக அம்மா அம்மா

என்று அலறுவதை கேட்க ஆனந்தமா

ஒரு புகலின்றி உன்  திருவடி அடைந்தேனே

திருஉள்ளம் இறங்காத தேவி

( உந்தனுக்கு நானொரு )

No comments:

Post a Comment