Search This Blog

Saturday, January 31, 2026

தளரா வளர்தெங்கு !!!! Gratitude is not a straight line !!

 

 

நன்றி என்பது நேர் நேர் கடன் அல்ல !

 

இலங்கையின் தெங்கு ஏற்றுமதித் துறையை விரைவுபடுத்துவதற்காக, உலக வங்கி குழுமத்தின் அங்கமான சர்வதேச நிதி நிறுவனம் (IFC) மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.

 

தெங்கு  -  what is that !?-   "தனிக்குறில் முன் ஒற்று"-  என்றால் என்ன !! 

தெங்கு (Thengu) என்பது பழந்தமிழில் தென்னை மரத்தைக் குறிக்கும் சொல்; "தெங்கு + காய்" புணர்ந்து "தேங்காய்" ஆனது போல, "தென்னை" என்பதன் பழைய வடிவம், இது இலக்கணத்திலும், இலக்கியத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ‘தெங்கு’ என்பது தேங்கு என நீண்டு, ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய்யெழுத்துக் கெட்டு, தேங்காய் என ஆனது.இதற்குரிய விதி, தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் என்பதாகும்.

 

நன்றி ஒருவற்குச் செய்தக்காலந்நன்றி

என்று தருங்கொலென வேண்டா-நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருத லால்.

 

ஒளவையார் அருளிய மூதுரை

 

ஒருவருக்கு உதவி செய்த உடன் பதிலுக்கு அவர் எப்பொழுது நமக்கு உதவி செய்வார் என்று நினைக்க வேண்டாம்  !!   பல வருடங்கள் நின்று நிதானமாக வளரும் உயரமான தென்னைமரமானது தன் கால் அடியில் இருக்கும் நிலத்தில் இருந்து நீரைப்பருகுகிறது. ஆனால் அது இன்சுவைக்கொண்ட இளநீராக பல வருடங்கள் கழித்தே மற்றவர்களுக்கு பயனதருகிறது.  ஆதலால், நாம் ஒருவருக்கு உதவி செய்தால் அவர் நமக்கு எப்போது உதவி செய்வார் என்று எதிர்ப்பார்க்க கூடாது. வளர்தென்னைமரம் போன்று அவரும் வேறு ஒருவர்க்கு சில ஆண்டுகள் கழித்து உதவி புரிவார்.

 


Just as a tree doesn't fruit the day it is watered, help rendered to a worthy person might not be repaid immediately. Avvaiyar advises us not to ask, "When will this person return the favor?". The coconut has cultural and religious significance in India offered to Gods and used in rituals. ‘ilaneer’ is sold and consumed in large quantities – one would be interested or frightened by the way, the top of tender coconut is cut with a sickle (aruval) wielded deftly by the seller !   

In a different context :   தெங்கு என்பது சிந்தோ நம்பிக்கையில் காணப்படும் ஒரு வகை பழம்பெரும் உயிரினமாகும்.   Tengu [ Japanese: lit. 'Heavenly Dog') are a type of legendary creature found in Shinto belief. They are considered a type of yōkai (supernatural beings) or Shinto kami (gods or spirits Buddhism long held that the Tengu were disruptive demons and harbingers of war.   

"தனிக்குறில் முன் ஒற்று" (தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் - நன்னூல்) என்பது ஒரு தமிழ் புணர்ச்சி விதியாகும். ஒரு சொல்லின் இறுதியில் தனிக்குறில் எழுத்தை அடுத்து மெய்யெழுத்து (ஒற்று) இருந்து, நிலைமொழி வருமொழியோடு சேரும்போது உயிர் எழுத்து முதலில் வந்தால், அந்த மெய்யெழுத்து இரட்டிக்கும். 

நமது வாழ்க்கை பாதையில், நாம் சிறுசிறு உதவிகள் செய்யலாம்.  நமக்கும் பலர் இவ்வுலகில் உதவிகளை செய்து இருப்பர். அவர்கள் எல்லோருக்கும் நாம் உதவிசெய்து விட முடியாது. அப்படியெல்லாம் கணக்கை நேர் செய்வதுவிடவும் முடியாது.   நன்றியுடனும் பிறருக்கு உதவி செய்வது நமது கடமை என்று நினைந்து எதிர்ப்பார்ப்பில்லாமல் பிறருக்கு உதவி செய்தல் வேண்டும்.  தென்னை மரம் தனது வேர் வழியாக உறிஞ்சிய நீரை, இளநீராகத் தன் தலையாலே (உச்சியிலே) தருகிறது. அதுபோல, ஒருவருக்குச் செய்த உதவியானது என்றாவது ஒருநாள் பயன் தரும்; எனவே பிரதிபலன் பாராமல் உதவி செய்ய வேண்டும்.  

ஏதோ சினிமாவில் கேட்ட வசனம் . ”விதை விதைச்ச உடனே பழம் சாப்பிடனும்னு நினைக்காதே !! இன்னிக்கி நான் விதைக்குறேன், நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ!!  அப்புறம் உன் பையன் சாப்புடுவான்.  அதெல்லாம் இருந்து பாக்க நான் இருக்க மாட்டேன். ஆனா விதை நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை. ஒவ்வொருத்தவனோட கடமை”

 
Interesting !
 
Regards – S Sampathkumar
31.1.2026

No comments:

Post a Comment