வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.
*********
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே- நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும்
தாழ்வே
நன்று இது தெரிந்து கொள்ள வேண்டும்- இந்த
ஞானம் வந்த பின் நமக்கு என்ன வேண்டும்? (வந்தே)
விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதியாரின் பாடல்கள்
தமிழக
நாட்டுப் பற்றாளர்களுக்கு உணர்ச்சியூட்டும் பாடல்களாக இருந்தன! இந்திய நாட்டுப் பற்றாளர்கள்
எல்லோருக்கும் 'வந்தே மாதரம்' என்னும் வங்க மொழிப் பாடல் மிகவும் உணர்ச்சியூட்டும்
பாடலாக இருந்தது. அந்தப் பாடலுக்கு பாரதியார் இருமுறை மொழிபெயர்ப்புக் கவிதை இயற்றியிருக்கிறார்.
'
"Vande Mātaram is a great poem that was adopted as the national song of the Republic of India in 1950. It was written in Sanskritised Bengali by Bankim Chandra Chatterjee in the 1870s, and was first published in 1882 in Chatterjee's Bengali novel Anandmath.
வந்தே
மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম্, Bônde Mātôrôm),
என்ற சுதந்திர உணர்வை தூண்டிய இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி
என்பவரால் எழுதப்பட்டது. அந்நியர் நம்மை அடிமைப்படுத்தி இருந்த காலத்தில், நாட்டளவில்,
வந்தே மாதரம் (தாய் (மண்ணே) உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான
விடுதலை முழக்கமாக இருந்தது. இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய
ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்;
தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய
பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜபதி ராய்
லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார்.
‘வந்தே மாதரம்’ பாடல்
மீது மிகுந்த பற்றுக் கொண்ட தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, அதனை இரு வடிவங்களில்
தமிழாக்கம் செய்து அளித்திருக்கிறார்.
(பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயா எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)
இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
…………………………………..
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
[the full version is not
posted here!]:
Srinivas
YOungmens Association [SYMA] as part of SYMA 50 – arranged for Oratorical
competition titled ‘Naan kanda Barathi” [the Barathi I saw] for school children
at Barathiyar illam – students enthusiastically participated.
Clip from
the dance performance at Barathiyar illam by Kalpavriksha Art Academy, Mylapore,
Chennai, disciples of Thirumylai Ramya Prakash. [voice of Dr Arthi Sriram,
music Veeramani Kannan]
Regards – S Sampathkumar
No comments:
Post a Comment