Search This Blog

Sunday, October 8, 2023

Tamil Grammar - illustrated : - குதிரை வண்டி !!

How interested are you in Tamil Ilakkanam !  How good were you in Grammar while at school  –  some gyan on Grammar that too through a photo post ! – if you have time  to read, do read and comment back !! 

தமிழ் இலக்கணம் -  உம்மைத் தொகை - தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்). 

குதிரை வண்டியில் பிரயாணம் செய்த அனுபவம் உண்டா !  முன்பெல்லாம் எல்லா ஊர்களிலும் இரயில் நிலையத்தின் வெளியே ஒரு குதிரை லாயம் இருக்கும்.  இரயிலில் வந்து இறங்கிய பயணிகள் வீட்டுக்கு செல்ல இந்த குதிரை வண்டிகளில் செல்வர்.  ரேக்ளா வண்டிகளை நினைத்து குழம்ப வேண்டாம்.  இவை மிக சாதுவாக,  சில புல்லுக்காக மெதுவாக சுமை இழுக்கும் குதிரைகள்.  

தமிழ் இலக்கண விதிகளின் படி :  மாடு + வண்டி =  மாட்டு வண்டி.   மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும்.  கயிற்றின் உதவியுடன், மாடுகள் வண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். அதே முறையில் குதிரை கட்டப்பட்ட வண்டி குதிரை வண்டி !!   

 உம்மைத் தொகை:  இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் "உம்" என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும்.  தமிழில் ஆறு தொகைநிலைத் தொடர்கள் உள்ளன. அவற்றில் ஒன்று உம்மைத்தொகை. ஆங்கில மொழியில் and என்பது இது போன்றது என கொள்ளலாம் : cow and calf; Horse and cart !!  

மாடுகன்று:  -  (மாடும் கன்றும் - உம்மைத்தொகை);  மாட்டுக்கன்று என்றால் மாட்டினுடைய கன்று.  அது போல குதிரை + வண்டி - குதிரைவண்டி - அதாவது குதிரை பிணைத்த வண்டி - குதிரை வண்டி.  இங்கே உள்ள படத்தில் குதிரையும்  உள்ளது ! வண்டியும் உள்ளது.  குதிரை வண்டியில் கட்டப்பட்டுள்ளது. 

 


எனவே இது குதிரை வண்டி என்பது இலக்கண ரீதியில் சரி !  ஆனால் உண்மையில் இங்கே குதிரையும் வண்டியும் இருந்தாலும் - இது குதிரை வண்டி அல்ல !!   

ஒரு ஞாயிறு மாலை வேளையில் ஆழ்ந்து யோசித்த உங்கள் -  Words of wisdom from  Aasami Sirippu Sinthanaiyaan

 
With regards – S. Sampathkumar
8th Oct  2o23 

No comments:

Post a Comment