Search This Blog

Saturday, October 14, 2023

Magnolia champaca - செண்பகமே செண்பகமே; தென்பொதிகை சந்தனமே !!

செண்பகம் (Magnolia champaca)   மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது வெண்ணிறப் பூ!!  . எனினும், முதன்மையாக இது பயிரிடப்படுவது இதன் வெட்டு மரத்துக்காகவாகும். ?!?!?

 


Instead of its fragrance, many of us may  immediately think of Ragadevan Illayaraja and the voice of Asha Bhosle in Tamil   

செண்பக பூவை தலையில் சூடி உள்ளார்.  பார்த்த உடனே மனம் - 

செண்பகமே செண்பகமே; தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே ! சேர்ந்திருந்தா சம்மதமே

 

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே

உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே

 

என முணுமுணுத்தது.  ஓர் காலத்தில் பட்டி தொட்டியில் எல்லாம் தினமும் ஒலித்த பாடல்.    கதாநாயகன் என்றால் ஒரு பாடலிலேயே  பல ஆடைகள்  அணிந்து கலக்குவார்கள் என்பதை உடைத்து, ராமராஜன் நீல நிற ட்ராயருடன் கலக்கிய 'எங்க ஊரு பாட்டுக்காரன்' - கங்கை அமரன் இயக்கத்தில்  1987ல் வெளியாகி நன்றாக ஓடியது.    இசைஞானி இளையராஜா  இசை இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம்

 


நீங்கள் ஏதாவது சொல்லுமுன்னர் - இதை அணிந்திருப்பது ஒரு ஆண் - திருநாராயணபுரம் ஸ்வாமி தம் சிகையில் (குடுமியில்) சூடியிருந்தபோது எடுத்தது.

 
With regards – S Sampathkumar
14.10.2023 

No comments:

Post a Comment