Search This Blog

Thursday, October 5, 2023

மாட்டுக்கார வேலா - ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

வண்டி உருண்டோட அச்சாணி தேவை

என்றும் அது போல வாழ்க்கை ஓடவே

ரெண்டு அன்புள்ளம் தேவை 

என்று துள்ளி குதித்த ஆடலுடன் P. சுசிலா & சீர்காழி கோவிந்தராஜன், பாடிய தெம்மாங்கு பாடல் கேட்டுளீர்களா !!   

மாடுகள் செல்வம்.  மாடு என்றால் தமிழில் செல்வம் என்று ஒரு பொருள். ஒருவர் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பதை அவரிடம்  இருக்கும் மாடுகளின் எண்ணிக்கையை வைத்தே கணக்கிட்ட காலம் இருந்தது. மாடு உழைப்பின் அடையாளம். மாட்டைப்போல் அத்தனை அதிகமாக மனிதர்க்காக உழைக்கும் இன்னொரு விலங்கு இல்லை. அதனால்தான் கடுமையாக உழைக்கும் மனிதர்களைப் பார்த்து `இவன் மாடாய் உழைக்கிறான்’ என்று பாராட்டுகிறோம்.  

பண்டை நாட்களில் போர் கூட மாடு சம்பந்தப்பட்டதே !!  போர்கள்  பசுமாடுகளைக் கவரும் வெட்சித் திணையில் தான் தொடங்குகிறது என்பதைச் சித்தரிக்கிறது இலக்கண நூலான தொல்காப்பியம்.  வெட்சி என்பது ஆநிரை கவர்தல்.  

முதலில் சொன்ன பாடலின் படம் வண்ணக்கிளி.  1959ம் ஆண்டு  டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. ஆர். ராமச்சந்திரன், ஆர் எஸ் மனோகர்  மற்றும் பலர் நடித்து இருந்தனர். ர்.   கே. வி. மகாதேவன் இசையில்  பாடல்களைக் கவிஞர் அ. மருதகாசி எழுதி பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, ஏ. ஜி. ரத்தினமாலா ஆகியோர் பாடியிருந்தனர். அப்படத்தின் இப்பாடலை நிச்சயம் அறிவீர்கள் !!    

காட்டு மல்லி பூத்திருக்க - காவல்காரன் பாத்திருக்க

ஆட்டம் போட்டு மயிலக்காள - தோட்டம் மேயப் பாக்குதடா  

மாட்டுக்கார வேலா - ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா



திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ப்ரஹ்மோத்சவத்தில் யானை வாகன புறப்பாட்டிற்கு பெருமாள் வாகன மண்டபத்தில் ஏள உள்ள தருணத்தில் ஒரு காட்சி - யானை வாஹனம் பின்புலத்தில், மக்கள், மாடு, கோலம் என அழகாக !!

 
அன்புடன் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
5.10.2023 

No comments:

Post a Comment