பழங்களிலே அற்புதமான இனிய சுவை கொண்டது பலா ! இன்று பலாப்பழம் படத்துடன் கொஞ்சம் தமிழ்
! உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற சங்க கால புலவரை அறிவீரா !!
ஆய் ஆண்டிரன், கடையெழு வள்ளல்களுள் ஒருவர், ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிட்டுள்ளார்
The jackfruit (Artocarpus heterophyllus), also
known as the jack tree, is a species of tree in the fig, mulberry, and
breadfruit family (Moraceae). The fruits of the tree are so sweet
and liked by everyone.
முக்கனிகளில் இரண்டாவதாய்
கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும்,
அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் உள்ளது.
பலாவிற்கு பலவு, பலாசம், சக்கை, வருக்கை, ஏகாரவல்லி எனப் பெயர்கள் உண்டு.
முக்கனிகளில் மிகவும் இனியது பலா. தமிழ்நாட்டில் பலாப்பழ விளைச்சலில் முதலிடத்தில்
இருப்பது கடலூர் மாவட்டம்தான். அதிலும் பண்ருட்டி பலாப்பழம் என்றால் தனிமதிப்புதான்
ஊர்ப் பொதுவிடத்தில்
இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி(குரங்கு) அம்மரத்தில் இரவலர் கட்டியிருந்த
முழவினை (மத்தளம்) பலாப்பழம் என்று எண்ணித் தட்டியது.
மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் சங்ககாலத் தமிழ் புலவர்களில் ஒருவர். அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்.'ஏணிச்சேரி' என்ற ஊரில் வாழ்ந்தவர், 'மோசி' என்ற இயற்பெயரைக் கொண்டவர். உறுப்புக் குறை (முடவர்) இருந்ததால் இப்பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. புறநானூறு மற்றும் பிற சங்க இலக்கியங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை, ஆய் அண்டிரன், மற்றும் சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி ஆகிய மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவர்.இவர் பாடிய பாடல்கள் மூலம் அக்கால மன்னர்களின் வீரம், கொடைத்தன்மை, மற்றும் மக்களின் கலாச்சாரத்தை அறிய முடிகிறது. ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் ஆவான் . இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த உறையூரின் ஒரு பகுதியாக ‘ஏணிச்சேரி’ என்ற பகுதி விளங்கியது. ‘ தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உறையூர், சங்ககால முற்காலச் சோழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைநகரம். காவிரியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூர், பழங்காலத்தில் 'உறந்தை' மற்றும் 'கோழியூர்' என்றும் அழைக்கப்பட்டது.
புறநானூறு எனும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூல். புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்றும் வழங்கப்படும். இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 160. பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.
உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்கள் 13
நமக்குக் கிடைத்துள்ளன. அவை யாவுமே புறத்திணையைச்
சேர்ந்தவை. இவை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுள் வைக்கப்பட்டுள்ளன. ஆய் அண்டிரனை இவர் பாடிய விதத்தைப் பாராட்டி மற்றொரு
புலவரான பெருஞ்சித்திரனார் “திருந்து மொழி மோசி பாடிய ஆய்” என்று பாடியுள்ளார்.
25.5.2026


No comments:
Post a Comment