Search This Blog

Thursday, January 26, 2023

Do you get up to the sound of rooster in the morning ?

 

It dawns every day and we have read that Roosters wake-up people with morning calls ! .. .. ..ever heard them or woken up because of them ?? 

Long ago,  before alarm clocks jolted us awake to greet the morning with bleary-eyed confusion, roosters performed that daily duty!!   Roosters shout upon seeing the light of the dawn ?   Now, a new study shows that roosters don't need the light of a new day to know when it's dawn—rather, their internal clocks alert them to the time. 



சாமக்கோழி ஏ கூவுதம்மா  !  ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல் -

என்ற பாடல் 1980களில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.  இசை - இசைஞானி இளையராஜா; வரிகள் - பஞ்சு அருணாசலம்;  பாடியவர்கள் : இளையராஜா மற்றும் எஸ். பி. சைலஜா.  

கோழி காடுகளிலும், வீடுகளிலும்,   பண்ணைகளிலும் வளர்க்கப்படுகிறது.  பெண்ணினம் பெடை / கோழி  எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது.  உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் கோழிகளே   இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் அதிக அளவில்  வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம்  கோழிப் பண்ணைகளுக்குப் பெயர் பெற்றது.  

கோழி கூவி பொழுது விடியும் !!  .. .. பொழுது விடிவதை காலம் காலமாக மனிதர்களுக்கு உணர்த்துவது  கோழியின் கூக்குரல் !! சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்  >?    உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஒன்று, மற்றொன்றை சார்ந்துள்ளது.  கடந்த காலத்தில் கிராமப்புறங்களில் சாமக்கோழி கூவும்போது பொழுது விடிவதாக நினைத்து, காலையில் எழுவதை மனிதர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  

சாமம் என்பது ஒரு நேர அலகு.  நடுச்சாமம் என்பது midnight.    சாமக்கோழி, என்பது  பெயர்ச்சொல். நடுச்சாமத்தில் கூவும் கோழியை குறிக்கும். சாமக்கோழி கூவும் நேரம் ஏறத்தாழ அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிக்குள் இருக்கும். இதற்கு அடுத்ததாக சேவல் அதிகாலை 5 மணிக்கு தொடந்து கூவும். பெட்டைக் கோழி கூவாது.  

தமிழ் மரபுப்படி கோழி என்பது சேவல், பெட்டை என்ற இரண்டு இனங்களையும் குறிக்கும். அதனால்தான் கோழி கூவுது என்ற சொல் வழக்கத்தில் வந்தது. சேவல் கூவுகிறது  என்று கூறப்படுவதில்லை .. ஆனால் கூவுவது என்னமோ சேவல்தான் !!  

Interesting !  

With regards – S. Sampathkumar
26.1.2023 

No comments:

Post a Comment