Search This Blog

Monday, January 23, 2023

Panama, Paasama ! - Indina jujube - எலந்த பழ, எலந்த பழம் !!

கோடீஸ்வரியின் மகள், வீட்டு வாட்ச்மேனின் மகனைக் காதலிக்கிறாள்.  வாட்ச்மேனின் மகனாக ஜெமினி கணேசன். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் ஜெமினி கணேசனை அழைத்துக்கொண்டு அந்தப் பெண் தனிக்குடித்தனம் சென்றுவிடுகிறாள். அதைப் பெரிய அவமானமாக நினைத்த அவரது அம்மா, ‘என் மகள் இறந்துவிட்டாள்... நான் அவளைத் தலைமுழுகிவிட்டேன்’  என்கிறார் ... படத்தின் கருவை பற்றி கருத்து ஏதேனும் கூறுமுன், நினைவிய கொள்ள வேண்டியது - இப்படம் 1968ம் ஆண்டு வெளிவந்தது.  கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில்  ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இசை கே. வி. மகாதேவன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன்.  இப்படத்தில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் இசைத்தது.  

‘பணமா பாசமா’ படம் மதுரை தங்கம் தியேட்டரில் ரிலீஸானது. அந்தக் காலத்தில் மிகப்பெரிய தியேட்டர் என்றால் தங்கம் தியேட்டர்தான். நூறு நாட்களுக்கும்மேல் ஓடி சாதனை படைத்தது.  

Panama Pasama (Money or Affection?) starring Gemini Ganesan and Saroja Devi was released in 1968 ! (many of you were not even born at that time) - directed and produced by K. S. Gopalakrishnan, was a musical hit too.  The film ran for  over 140 days and was  remade the following year in Hindi as Paisa Ya Pyaar.

 

முன்பெல்லாம் எல்லா பள்ளி வாசல்களிலும் தள்ளு வண்டிகளில், இப்பழத்தை விற்பார்கள்.  Bher என்று ஹிந்தியிலும் Regi பண்டு என்று தெலுங்கிலும் அழைக்கப்படும் இது, பெரிய சைஸிலும் கிடைக்கிறது. பெரிய சைஸ் பழம் அவ்வளவு ருசியாக இருக்காது. இலந்தம் பழத்தை சாப்பிடும் முன், பழத்தினுள் சிறு புழுக்கள் இருக்கிறதா என பார்த்து,   சாப்பிடவேண்டும்.  இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை பிரமாதமாக இருக்கும். சிலர் மிளகாய்த் தூள், உப்பு பிசறி இலந்தம்பழத்தை சாப்பிடுவார்கள். பழத்தை இளம்சூடு வெந்நீரில் நன்றாக அலம்பி சாப்பிடுவது நல்லது.   

Ziziphus mauritiana, also known as Indian jujube is a  tropical fruit tree species belonging to the family Rhamnaceae.  It is a spiny, evergreen shrub or small tree up to 15 m high, with trunk 40 cm or more in diameter; spreading crown; stipular spines and many drooping branches. The fruit is of variable shape and size. It can be oval, obovate, oblong or round. It is fleshy and crisp with pungent smell.  When slightly underipe, this fruit is a bit juicy and has a pleasant aroma. The fruit's skin is smooth, glossy, thin but tight.  

இலந்தை செடி சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இலந்தைப் பழத்தில்  பல  சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கி உள்ளதாம்.    இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.  சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும்.   

இலந்தம் பழத்தை கொட்டை நீக்கி, வெயிலில் உலர்த்தி, புளி, மிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைத்து, சிறு வடைகளாக தட்டி, மீண்டும் வெயிலில் காய வைத்து எடுத்தால் - ருசியான இலந்தம் வடை கிடைக்கும்;  அம்பிகா அப்பளம்  போன்ற அப்பள கடைகளில் இந்த இலந்தை வடை கிடைக்கும்.   

L. R. Eswari  was not exactly a  melody queen like  P. Susheela and S. Janaki  but was a versatile singer with a different voice.   பணமா  பாசமா படத்தில் LR ஈஸ்வரி பாடிய இந்த பாடல் மிக மிக பிரபலமானது.  

எலந்த பழம், எலந்த பழம், எலந்த பழம் …. 

செக்க செவந்த பழம்; இது தேனாட்டம் இனிக்கும் பழம்

எல்லோரும் வாங்கும் பழம்; இது ஏழைக்கினே பொறந்த பழம்

எலந்த பழம், எலந்த பழம், எலந்த பழம் .. …  

LR ஈஸ்வரிக்கு பேர் பெற்று தந்த மற்றோமோரு பாடல்  : 

செல்லாத்தா செல்ல மாரியாத்தா

எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா  !! 

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா

இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா

இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா !!

 

Interesting !
 
With regards – S. Sampathkumar
23.1.2023 

No comments:

Post a Comment