மனிதன் உணர்ச்சிகளின் பிம்பம், அகங்கார எண்ணங்களின் அகோர பிரதிபலிப்பு. அவ்வப்போது அல்லது எல்லா சமயங்களிலும் எழும் குரல் - யார் பெரியவன் ? - நீ யார் ? - அவ்வளோ பெரிய அப்பாடக்கராங் ! நான் யார் தெரியுமா ? என்ற கேள்வி
ஆமாம் யார் பெரியவர் ? ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதால் நான் பெரியவன் எனில், நம்மைவிட உயரத்தில் இருப்பவர்கள் எல்லாம் நம்மை விட பெரியவர்களோ ! - இதுதான் உலகமா ! இதுதான் வாழ்க்கையா !!
யார் பெரியவர் ? - வண்டியில் அமர்ந்து செல்பவரா ! அல்லது ஓட்டுபவரா ! காரில் நீங்கள் பணிக்கு நியமித்த ட்ரைவரை விட நீங்கள் பெரியவர் ஆயின், விமானத்தில் செல்லும்போது, அந்த கேப்டன்ஐ விட ?
சிறுவயதில் நாம் நினைத்தது ! - அண்ணா, அக்கா நம்மைவிட பெரியவர்கள்; பிறகு அப்பா, அம்மா, மாமா, உறவு முறையினர், பின்னர் ஆசிரியர் - இவைகூட இன்றைய சமுதாயத்தில் இல்லையோ ! திடீர் என்று நண்பர்கள் தான், பின்னர் பணிக்கு சென்ற போது - நம்மை விட உயர் பதவியில் இருந்தவர்கள், நம்மை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்கள் ! நம்மைவிட மற்றவர் பெரியவர் என்ற நிலையிலிருந்து தடுமாறி நாமே பெரியவர் என்று ! மன்னராட்சியில் மன்னர் தாம் பெரியவர் - குடியாட்சியில் - அரசியல் தலைவர்களா !!
மனிதர்களின்
முன்னெற்றத்துக்கு பெரிய இடைஞ்சலாக இருப்பது நான் பெரியவனா, இல்லை நீ பெரியவனா என்ற
மனோபாவம். பெரிய அரசர்கள் முதல் பணக்கார்கள் வரை, இந்த எண்ணத்தால் சரிந்தவர்கள் ஏராளம். எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் இந்த எண்ணத்தில்
இருந்து அவர்களால் வெளியேற முடியாமல் தவிக்கின்றார்கள். இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு
வாழும் பற்பல உதாரணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. . இந்த
மனோபாவமே உலகப்போர்கள் ஏற்பட கூட காரணமாகவும் அமைந்திருந்தன.
இங்கே மைனா - காக்கையை விட உயர்ந்து அமர்ந்து உள்ளது ? - காக்கை அதை சட்டை செய்ததாகவே இல்லை! உண்மையில் இது காட்சி பிழையே !! .. ..
எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ
என்ற மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளுடன் இந்த நாளை துவங்குவோம்.
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
5.6.2025
No comments:
Post a Comment