சிறகடிக்கும் ஆசைகளை சிறையில்
பூட்டுவேன்
நீ சிரித்திருக்கும் காட்சியிலே
மனதைத் தேற்றுவேன்
திரு TM சௌந்தரராஜன், பி சுஷீலா குரல்களில் இந்த பாடலை கேட்டதுண்டா !! - எழுதியவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில் பிறந்த சோமு. சின்னப்ப தேவரின், யானைப்பாகன் படத்தில் இடம்பெற்ற, 'ஆம்பளைக்குப் பொம்பளை அவசியம் தான்...' என்ற நகைச்சுவை பாடல் தான், அவர் எழுதிய முதல் பாடல்.
மேலே உள்ள
பாடல் இடம் பெற்ற திரைப்படம் MGR நரசிம்ம பல்லவனாக நடித்த 'காஞ்சித்தலைவன்'. 1963ல்
ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி,
எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். அந்த பாடலின் முதல் வரிகள் :
ஒரு கொடியில் (செடியில்) இரு மலர்கள்
பிறந்ததம்மா பிறந்ததம்மா
ஆலங்குடி
சோமு பல பாடல்களை எழுதினார். அரசியல் மேடைகளில்
தவறாமல் ஒலிக்கும் இந்த வரிகள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். .
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை-
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை..
ஒரு செடியில் 2 செம்பருத்தி பூக்கள்
அன்புடன்
ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
26.11.2023
.jpg)
No comments:
Post a Comment