Search This Blog

Friday, August 18, 2023

Boatman - வசந்த கால நதிகளிலே

 வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்

 

நான் கவிஞனும் அல்ல, நல்ல ரசிகனும் அல்ல - எனினும் சில வரிகள் மனதில் புதைந்து விடுகின்றன.  பலருக்கு சினிமா ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திகிறது.  நாம் மனதில் விரும்புனவற்றை கதாநாயகன் செய்வதாக மாயை கொள்கிறோம்.  

வாழ்க்கையில் வெற்றி தோல்வி உண்டா ! என்பதே மனா நிலை.  நாம் அரிதாக சாதித்தாக நினைக்கும் விஷயம் வேறொருவர் எளிதில் செய்கிறார். நமக்கு கிடைத்தற்கரியது பிறிது  ஒருவர்க்கு எளிமையில் அமைகிறது. எவர் ஒருவர் வெற்றியின் தொடர்பில் இருந்து அறுபடுகிறாரோ, அவரை எதிரிகள் சூழ்ந்து விடுவர். எவர் ஒருவர்; எதிரிகளின்  தொடர்பு முறையை தகர்க்கிறாரோ, அவர் வெற்றியாளனாகி விடுவார்.  

சந்தம் இல்லாமல் வெறும்  சத்தமே பாடலாகி விடும் காலத்தில், இதோ இங்கே ஒரு பழைய பாடல்.  உண்மையான கவிப்பேரரசு கண்ணதாசன் இயற்றி, எம்.எஸ்.விஸ்வநாதன்  இசையமைத்து, ஜெயச்சந்திரன், வாணிஜெயராம், எம்.எஸ்.வி, ஆகியோர்  பாலச்சந்தர் இயக்கத்தில் பாடி, ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த "மூன்று முடிச்சு" திரைப்பட  பாடல்.  இப்பாடல் அந்தாதியில்  தளைகளுடன் சீர்வரிசையில் அமைந்துள்ளது.

 


மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள் 

விதிவகைகள் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்!

 
Words of wisdom from  Aasami Sirippu Sinthanaiyaan

-S Sampathkumar
18.8.2023

No comments:

Post a Comment