Search This Blog

Tuesday, July 25, 2023

Smile - the language of Parrot - and .. .. Tamil cinema !!

 


This morning was so delighted to see so many of them .. .. and when a Pigeon drew closer, the beautiful Parrot just nodded its head and made a sound, expressing as though it was sending a Smile, a big one at that !! 



Have heard my friend say often quoting BBC – ‘this morning if you happen to see one without a smile, given them yours !’   - what strikes your mind when you think of  நகை smile !! 

நகை  என்றால் பெண்களுக்கு  உடன் நினைவு வருவது அணிகலன்கள் - எவ்வளவு விலை அதிகமோ அவ்வளவு மற்றோரு நகையான புன்னகை அவர்கள் முகத்தில் தோன்றலாம்.  தன மனைவியின் முகத்தில் அடிக்கடி புன்னகையை காண்பவன் சந்தோஷமாக வாழும் மனிதன் !!    பொய்யாமொழிப்புலவர் வள்ளுவனின் வாய்மொழியில் ஒரு குறள் :

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

 

அதிகபட்ச நட்பாக நடந்து தனக்குள் பகை எண்ணுபவரை சிரித்த முகத்துடனே நட்பினை விலக்கிட வழி செய்ய வேண்டும்.  நேர்மையற்ற மனிடப் பதர்களின் நட்பு நல்லதல்ல. பகை உணர்வு வந்தால் பல நூல்களாலும் பக்குவம் பெறமுடியாது. போலியாக சிரிப்பதும் அழுவதும் மனிட பதர்களின் பண்பு இவர்களிடம் கவனமாக விலக வேண்டும். பகைவரின் நட்பு கட்டாயம் ஏற்கவேண்டிய சுழலில் மனதளவில் விலகி ஒதுக்க வேண்டும். 

தமிழ் சினிமாவில்சிரிப்பு பரிணாம வளர்ச்சியை, சமுதாய மாறுதலை காட்டுகிறது !!  1964ல் வெளிவந்த ஆண்டவன் கட்டளை, திரைப்படத்தில்  விசுவநாதன் -இராமமூர்த்தி இசையில்  கவிஞர் கண்ணதாசன் எழுதி. சந்திரபாபு பாடிய பிரபல பாடல் : 

 

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது

 

சில பத்து வருஷங்கள் கழித்து வந்த 'வெற்றிக்கொடி கட்டு' பட பாடல் வரிகள் :

 

சிரிப்பு வருது சிரிப்பு வருது  சித்தப்பா !  - இந்த சின்ன பொண்ணு யாரு

உந்தன் செட்டப்பா ? பொண்டாட்டிக்கு தெரிஞ்சுப்புட்டா, சித்தப்பா

உன் டப்பா கிழிஞ்சு போகுமப்பா  .. ..  சித்தப்பா

 


உடனே பொங்கி எழுந்து சமுதாய சீரழிவை பற்றி சிந்திக்காமல், சுமாராக சிரித்து விட்டு, இன்றைய அலுவலக பணிகளை தொடங்குவோம். 

காலை சிந்தனை அலைகள் - சுவாமி ஒன்றும் அறியாதவனப்பா!!

 
with regards – S. Sampathkumar
25.7.2023 

No comments:

Post a Comment