Search This Blog

Tuesday, May 27, 2025

Village road .. ... ... குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா

How often do you visit villages ? – or when did you visit a village last ! – and how long was your stay there, few minutes, hours, days  ??   A long silent, slow journey on a Thar road with Coconut trees on either side, travel on a bullock-cart must be on the wishlist of most travel lovers !!



1989ல் வெளிவந்து இன்றைக்கும் பட்டி தொட்டி எல்லாம் முழங்கும் பாடல் - 'மாங்குயிலே பூங்குயிலே'   *கரகாட்டக்காரன்*   ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த  படம், - கங்கைஅமரன் தயாரித்து இயக்கிய படம்.

கிராமங்கள் புகைப்படத்தில், சினிமாவிலும் பார்க்க மிக மிக ரம்மியமாக அழகாக இருக்கும்.  நேரில் நிஜத்தில் சில நாட்கள் அங்கே வாழ்வது வித்தியாசமாக இருக்கலாம்.   தமிழ் சினிமா  -   கதாநாயகிகளை விட கதாநாயகர்களையே அதிகம் முன்னிறுத்தி உள்ளது.  எம்ஜிஆர் சிவாஜி, பிறகு ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த் என படங்கள் வந்த காலத்தில் ராமராஜனை முத்தையாவாக முன்னிறுத்தி கங்கை அமரன் பெரும் வெற்றி கண்ட படம் ' கரகாட்டக்காரன்'.  கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவை பிரமாதம்.   இளையராஜாவின் கிராமிய இசையில் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத்தந்த திரைப்படம்.   

இசைஞானி இளையராஜாவின் இசையில் "மாங்குயிலே பூங்குயிலே" அனைத்து தரப்பினரயும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற பாடல் - தவிர மற்றைய பாடல்களும் மிக சிறப்பாக இருக்கும்.   மனோ சித்ரா குரலில் ஒரு சிறப்பான பாடல்:  

குடகு மலை காற்றில் வரும்  பாட்டு கேக்குதா என் பைங்கிளி

ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது

என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது  .. …

 

மானே மயிலே, மரகத குயிலே, தேனே நான் பாடும் தெம்மாங்கே

பூவே பொழுதே, பொங்கி வரும் அமுதே, காதில் கேட்டாயோ

என் வாக்கே, உன்னை எண்ணி நான் தான், ஒரு ஊர்கோலம் போனேன்

தன்னந்தனியாக நிற்கும் - தேர் போல ஆனேன்

 

இத்திரைப்படம் மதுரை திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேல் (425 நாட்கள்) ஓடி சாதனை படைத்தது.   "தில்லானா மோகனாம்பாள்" கதையை  நினைவு படுத்த வல்ல கதையை கொண்ட  இத்திரைப்படம் கிராமிய வாசனையும், நகைச்சுவை ரசமும் பெற்று கரகாட்டத்தை முன்னிறுத்தி கிராமக் காவியமாக படைக்கப்பட்டிருந்தது. பழம்பெரும் நடிகையான தேவிகாவின் புதல்வி கனகாவிற்கு இது முதல் தமிழ்த்திரைப்படம்  நகைச்சுவை இணை நாயகர்களான கவுண்டமணி-செந்திலின் நகைச்சுவைப் பயணம் இத்திரைப்படத்தினின்று புத்துயிரும் ஓட்டமும் பெற்றது.    

A  picture post though content is more about Karagattakaran cinema
 
Regards – S Sampathkumar
27.5.2025

 

 

  

1 comment:

  1. கிராமத்தில் அழகு ஜீவன் உண்டு
    என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது கிடாம்பி

    ReplyDelete