Search This Blog

Friday, May 16, 2025

Enna oru! lookku !!- என்ன பார்வை உந்தன் பார்வை

What a look ?  (rather enna oru lookku !) – a Black kite (Parunthu) pictured and searching for something remembered this song !! 

 


என்ன பார்வை உந்தன் பார்வை,  இடை மெலிந்தாள் இந்தப் பாவை

மெல்ல மெல்ல பக்கம் வந்து தொட்ட சுகம் அம்மம்மா....ஆ.. 

இந்த பருந்தின் பார்வைக்கு ஒரு பாடலை தேடிய போது, இந்த பாடல் ஞாபகம் வந்தது.  இன்று தான் இந்த பாடலை முதல் முறையாக யூ டியூபில் பார்த்தேன்.  அந்த நாள் கடற்கரை, அழகான புல்வெளிகள், பின்புலத்தில், சென்னை பல்கலைக்கழகம், பொதுப் பணித்துறை கட்டிடம், எப்போதாவது செல்லும் வண்டிகள்; வித்தியாசமான சென்னை மாநகரம்.  பாடல் முடியும் சமயம் - காஞ்சனா நடனமாடுவதை காரின் முன்புற கண்ணாடியுனூடே ரசித்துக்கொண்டே மெதுவாக வண்டி ஓட்டும் முத்துராமன், (அவர் கூட சற்று rear view கண்ணாடியில் தெரிகிறார்) 

படம் : காதலிக்க நேரமில்லை (1964); குரல்கள்  : கே.ஜே.ஜேசுதாஸ் - பி.சுசீலா; இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி; பாடல் வரிகள் -  கவியரசர் கண்ணதாசன் 

திரு ஸ்ரீதர், திரு சித்ராலயா கோபு இவர்களின் மறக்க முடியாத முத்திரையாக நினைக்கப்படும் படம் -  காதலிக்க நேரமில்லை.   1964ம் ஆண்டு வெளிவந்த காதல் - நகைச்சுவை தமிழ்த் திரைப்படம் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.  இத்திரைப்படம் பிரேமின்ச்சி சூடு (1965) என்ற பெயரில் தெலுங்கிலும், ப்யார் கியே ஜா என்ற பெயரில் இந்தியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது. 

Never stare at people, smile at people !!  words of  morning wisdom from aasami sirippu sinthanaiyan

Regards – S Sampathkumar
16.5.2025 

No comments:

Post a Comment