Search This Blog

Sunday, May 7, 2023

Bees and Beans !!

Bees and Beans !!

பூவில் வண்டு போதை கொண்டு,  தாவும் நிலை தாளேன் ஐயா
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு  காவல் மீறும் காலம் ஐயா.
அழகான சிலையோடு பழகாமலே, அனுராக சுகமேதும் புரியாமலே
இதுதானே என் வாழ்வில் முதல் பாடமே !  இனிமேலே மலரோடு உறவாடுமே!!
 

இந்த பாடலை நீங்கள் கேட்டு இருக்க வாய்ப்பு மிக குறைவு !!  -  இந்த பதிவு பாட்டை பத்தியது அல்ல !  - பறக்கும் பூச்சிகளை பற்றியது.  பூச்சி இனத்தைச் சேர்ந்தவை வண்டுகள். பூச்சி இனங்களில் 40 சதவிகிதம் வண்டுகள்தான். 3,50,000 வகை வண்டு இனங்கள் உள்ளனவாம்; . இன்னும் கண்டறியப்படாத வண்டு இனங்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது கொசுறு செய்து.  பூமியில் தோன்றிய பழமையான உயிரினங்களில் வண்டுகளும் ஒன்று.  வண்டு என்பது ஆறு கால்கள் கொண்ட ஒரு பறக்கும் பூச்சியினம். இவற்றிற்கு, முன் இறக்கைகள் இரண்டும் பின் இறக்கைகள் இரண்டும் ஆக நான்கு இறக்கைகள் உண்டு. முன்னால் தலைப்பகுதியில் இரண்டு உணர்விழைகள் உண்டு. வண்டுகளின் முன் இறக்கைகள் கெட்டியானவை, பின் இறக்கைகள்தான் பறக்கப் பயன்படும் மென்மையான படலத்தால் ஆனவை.
 
வண்டுகளை அறிய சினிமா பாடல் தான் வேண்டுமா !! இதோ இங்கே ஒரு தெய்வீக பாசுரம்.  ஒன்பதாம் திருமுறை, சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கியவை.   இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன.  இதோ இங்கே  'புருடோத்தம நம்பி - கோயில்'குறித்த பாசுரம். 
 
வாரணி நறுமலர் வண்டு கெண்டு,     பஞ்சமம் செண்பக மாலை மாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்  வந்துவந்திவை நம்மை மயக்கு மாலோ
சீரணி மணிதிகழ் மாட மோங்கு     தில்லையம்பலத்தெங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந்தஞ்சல் என்பார்  ஆவியின் பரமன்றென்றன் ஆதரவே


 
தேன் ஒழுகுகின்ற நறுமலர்களைக் கிளறுகின்ற வண்டுகள் பாடுகின்ற பஞ்சமப் பண், சண்பகப் பூமாலை, மாலைக் காலம் என்ற இவை நம்மை மயக்குகின்றன. அம்மயக்கத்தைப் போக்க அழகினைக் கொண்ட மணிகள் விளங்குகின்ற மாடங்கள் உயர்ந்த தில்லையம்பலத்திலுள்ள எங்கள் செல்வனாகிய சிவபெருமான் நமக்குக் காட்சி நல்கவில்லை. என்திறத்து அருள் செய்து என்னை அஞ்சாதே என்று சொல்லக்கூடியவர் யாவர் உளர்? என் விருப்பம் என் உயிரால் தாங்கப்படும் அளவினதாக இல்லை.  

The song at the start is from movie ‘Anbu Engey” (Where is love?), 1958 movie directed by D. Yoganand and produced by V. Govindarajan, starring SS Rajendran, K. Balaji, Pandari Bai and S. V. Ranga Rao, with Devika, and others.
 

The beetles pictured here are buzzing around bean plant [அவரைச்செடி]
 
 
With regards – S. Sampathkumar
7.5.2023 

No comments:

Post a Comment