Search This Blog

Friday, December 5, 2025

Kingfisher - அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை

 

Kingfisher - அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை 

 

In the 1800s these birds were hunted for their bright feathers that were used to adorn hats.It is the State bird of West Bengal.  .. .. easy, King Fisher -  a family, the Alcedinidae, of small to medium-sized, brightly colored birds in the order Coraciiformes.

 

உங்கள் நண்பர்கள் யார் !  பள்ளி பருவத்து, உங்கள் குழந்தை பருவத்து தோழர்களுடன்  இன்னமும் தொடர்பில் உள்ளீர்களா ?  - நம் நண்பர்கள் சிலர் சமுதாய தகுதி பார்த்தே பழகுகின்றனர். சில நண்பர்கள், நமக்கு தெரிந்த பணக்காரர்கள், புது அறிமுகங்களிடம் தங்கள் சிறந்த முகத்தை காட்ட முயலுகின்றனர்.  அவ்வமயத்தில், பாலமாக இருந்த நம்மையும் புறந்தள்ளி, தம்மை உயர்த்தி, நம்மை தாழ்த்தி வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுவதை அனுபவித்து இருக்கிறீர்களா ? 

நாம் என்ன செய்கிறோம்? ஒரு சிலரோடு பழகுகிறோம்; அவர்களின் நிலை எந்த விதத்திலாவது தாழுமானால் அவர்களின் பழக்கத்தையே தவிர்க்கிறோம். பார்த்தாலும் தெரியாதவர் போல தூரப் போகிறோம். இது மிகப் பெரிய பண்பின்மை.  மக்களில் உருவில் மனிதர்களைப் போல தோற்றம் அளித்துக் கொண்டு உணர்விலும் குணத்திலும் மிருகங்களும், கொடிய உயிரினங்களும் ஆக இருப்பவர் பல பேர். நன்மை செய்தவர்களுக்கே நஞ்சை ஊட்டும் பாம்புகள் சிலர் இருக்கிறார்கள். உதவி செய்தவனையே ஆற்றில் தள்ளும் கரடிகள் இருக்கிறார்கள்.   பொதுவாக வளங்கள் தீர்ந்தபின்னர் விலகுவது உலக நியதி ஆகி வருகிறது வருத்தமே !!  

இதையே மூதுரையில் அவ்வை பாட்டி :

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு.

நீர் அற்றுப்போன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். அதுபோலத் துன்பம் வந்த காலத்திலில் விலகிப் போய்விடுபவர் உறவினர் ஆகமாட்டார். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற பூக்கொடிகள் ஒட்டிக்கொண்டே இருப்பது போலத் துன்பம் வந்த காலத்திலும் துணைநின்று உதவுபவரே உறவுக்காரர் ஆவார். 



மீன்கொத்திப் பறவை, மீன்கள் உள்ள நீர்நிலைகளில் சிறகுகள் நீரில் படும் அளவில் தாழப் பறந்து கொண்டே செல்லுமாம்! மீன் அகப்படுமானால் மீனைக் கொத்திக் கொண்டு உறவாடிய நீரைச் சிறகினால் உதறிவிட்டு உயரப் பறந்து விடுமாம்!  இது குணக்கேடாக கூறப்பட்டாலும், பறவைக்கு அதுவே இயல்பு.  பறக்கும் பறவை, நீரில் மூழ்கி, அங்கேயே வாழ இயலாது !! 

Some of you may still be looking for - Kingfisher Calendar that featured  models in swimsuits published by the Indian conglomerate United Breweries Group for 19 years from 2003 to 2021.    Atul Kasbekarr was the photographer behind these Kingfisher Calendar shoots.  He was also the honorary chairman of the Photographer's Guild of India.  

With regards – S. Sampathkumar
5.12.2025

 

No comments:

Post a Comment