Valluvar Kottam (வள்ளுவர் கோட்டம்) stands tall in Chennai – dedicated to the classical Tamil poet philosopher Thiruvalluvar, it located at the intersection of the Kodambakkam High road and the Village road in Nungambakkam area. The monument now stands at what was once the deepest point of a local lake called the Nungambakkam lake
நகல்" என்பது ஒரு அசல் பொருளின் பிரதி, பிரதிபலிப்பு அல்லது படியெடுத்தலைக் குறிக்கிறது. இது ஒரு கலைப் படைப்பின் மற்றுமொரு பதிப்பு, ஒரு ஆவணத்தின் பிரதி (எ.கா., சட்ட அல்லது பள்ளி ஆவணங்களின் நகல்), அல்லது வணிக நோக்கங்களுக்காக எழுதப்படும் விளம்பர வாசகங்கள் போன்ற பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. "நகல்" என்பது 'copy' என்பதன் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பாகும்.
தமிழ் ஒரு அற்புத மொழி. நகு என்பது சிரி என்று பொருள் படும். இடுக்கண் வருங்கால் நகுக எனுமிடத்தில் - துன்பம் வரும்போது, அதற்காக கலங்காமல், அதை சாதாரணமாக கொண்டு சிரித்தல் [நகுதல்] வேண்டும். "நகைத்தல்" என்ற தமிழ் வார்த்தையின் பொருள் சிரித்தல் என்பதாகும். நகல் எனும் வார்த்தைக்கு - சிரிக்கை (சிரிப்பு), மகிழ்ச்சி (தம்முட் குழீஇ நகலி னினிதாயின்(நாலடி, 137)), நட்பு (நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு (குறள், 860)) ; எனும் பொருளும் உண்டு.
இதோ இங்கே செந்நாப்போதாரின் ஒரு திருக்குறள் :
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
நகல்வல்லர் "நகல்வல்லர்" என்பது சிரித்துப் பழகும் திறன்
கொண்டவர் அல்லது மற்றவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகும் திறன் கொண்டவர் என்பதாகும். நல்ல பண்பு இல்லாமையும் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பும் இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத
பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.
Photo of Valluvar kottam taken from a good 2 km
or more – from Office building at Bazullah Road, Chennai 17 in Nov 2020.
21.11.2025
.jpg)
No comments:
Post a Comment