Search This Blog

Friday, October 17, 2025

நீட்டோலை வாசியா நின்றான் ~ ~ நல் மரம்

 

பனை மரங்களும் காற்றாலைகளும் !!

 

தமிழ்மொழி தனிலே - மரம் என்பது ஒருவரை, அவர்தம் அறிவு குறைவை சுட்டிக் காட்ட பயன்படுத்தப்படுகிறது !!  மரம் என்பது ஜட பொருளாக, சட்டென்று உணர்ந்து கொள்ளும் திறன்  இல்லாதாக காட்டப்படுகின்றது. 

Wood is the hard, fibrous material that forms the structural tissue of trees and other plants, used for building, fuel, and making objects.  Remember a stylish left handed opener Greamd Wood, who debuted against India in 1978 when their frontline batsmen were away in WSC.  In that B&H 1985 match at Melbourne on 3rd Mar 1985, Roger Binny castled him with a beauty.   

Calling someone a Wood or tree is derogatory.  – it would imply -  they are not very bright, and are  like a piece of wood. A particularly harsh variation is that their "family tree didn't have enough branches," suggesting a lack of intelligence running in the family.  In acting, a "wooden" performance is a common criticism used to describe an actor who is stiff, lacks emotion, and shows no charisma.  

கிராமங்களில், வயல் வெளிகளில், தென்னைமரமும், பனை மரமும் ஓங்கி உயர்ந்து நிற்கும்.  சில ஒற்றை பணியாக இருக்கும்.  ஒற்றை மரம் என்பது தனித்தன்மை, மற்றவர்களிடம் இருந்து விலகி இருத்தல், பொதுக்கருத்துக்களோடு ஒண்றினையாமை என கொள்ளலாம்.  தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமான பனைமரம், உயரமாக வளரக்கூடியது மட்டுமல்ல பல மருத்துவ குணங்களையும் கொண்டதாகும்.  பனைமரம் என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதன் நுங்குதான். 

இதோ இங்கே : ஔவையாரின் மூதுரை -:

 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள்-சவை நடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன்  நல் மரம்.

 

இதன் பொருள் :  கிளைகளையும் தழைகளையும்  உடைய நன்கு  பெரிதாக வளர்ந்து காட்டின் நடுவில் நின்றிருக்கும் மரங்கள் சிறந்தவை அல்ல.  அறிஞர்களின் கூட்டத்தின் இடையில் கையில் கொடுத்த ஏட்டை படிக்க முடியாமல் நின்றவனும், ஒருவன் கருத்தின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள முடியாதவனும் தான் தரமற்றவனாக ஜடப்பொருளாக அறியப்படுவான். சிறந்தவன் அல்ல.

 


பிறர் மனதின் கருத்தை அறியாதவன் மரம்.  எனினும்  ஒவ்வையார் ஏன் நல்மரம் என்று கூறினார் ?  அறிவு, ஆற்றல் இருந்தும் அதை வெளிப்படுத்தாமல்  இயல்பாக சலனமற்று தெளிவுடன் இருப்பவரே நல்மரம் என்றும் பொருள் வருமோ !!

 
Photo of some palm trees and windmills taken at Dharapuram, Tamilnadu
 
Regards – S Sampathkumar
17.10.2025

1 comment:

  1. Venkatesan KuppuswamyOctober 17, 2025 at 1:03 PM

    The final point on the Trees seems debatable

    ReplyDelete