The other day was at a posh
shop – ordered some eatables and
Coffee – though only a couple of items,
the young educated girl at the counter, opened Calculator on her phone and totaled
twice !! .. .. .. a few minutes later,
bought 10 odd vegetable items at a roadside vendor – this time a old lady, said the
value at once –
different vegetables, different rates, different quantities !!!
Are you a Gen Z kid ! What do you see in this picture ?? What do you think will be the response – if you asked to buy ‘one azhakku of mallakkottai’ … .. what is ஆழாக்கு and what is மல்லாக்கொட்டை !! – what is மானாவாரி சாகுபடி ??
பால், எண்ணெய் போன்ற திரவங்களையும், நெல் மற்றும் தானியங்களையும் மொண்டு (முகந்து) அளக்கும் முறைக்கு முகத்தலளவை என்று பெயர்.
ஆழாக்கு = அரைக்காற்படி.(எட்டு ஆழாக்கு ஒரு படி). முகத்தல் என்றால் : மொள்ளுதல்; அளத்தல் ; தாங்கியெடுத்தல் ; விரும்புதல் ; நிரம்பப்பெறுதல் ; மணம் பார்த்தல். வேர்க்கடலை மாவடு போன்றவற்றை படி (கால் படி; அரைப்படி; 1 படி) எனவும்; வேப்பம் பூ போன்றவற்றை ஆழாக்கு என்ற அளவையிலும் விற்றார்கள் - நாம் வாங்கினோம் என்பது ஒரு புதிய தகவலாக இருக்கலாம்.
பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவை நெல்லிலக்கம் எனவும் வழங்கப்பட்டது. முகத்தல் அளவை உங்களை கொஞ்சம் ஈர்த்து இருந்தால் : படி - 4 படி கொண்டது, ஒரு மரக்கால். 6 மரக்கால் கொண்டது, ஒரு பறை.2 பறை கொண்டது, 1 கலம். 2 கலம் கொண்டது, 1 மூட்டை. 60 மரக்கால் கொண்டது, ஒரு உறை. கிலோ கற்கள் போன்றவை வருமுன்னர் காய்கறிகளை (பொருட்களை) எடை பார்க்க... கூழாங்கற்கள், நெல்மணிகள், குன்றிமணி, தெள்ளுக்காய், களர்ச்சிக்காய் போன்றவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மணிலா பயிறு (நிலக்கடலை – ground nut) என்பது தமிழகத்தில் வறண்ட மற்றும் இறவைப் பாசன நிலங்களில் பரவலாகப் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துப்பயிராகும். நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை (வட்டார வழக்குகளில், வேர்க்கடலை, கச்சான், மலாட்டை மற்றும் கலக்கா) என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும்.
செடி அமைப்பைப் பொருத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கொத்து, அடர்கொத்து, கொடி என உள்ளது. பொதுவாக கொத்து ரகங்கள்தான் விவசாயிகளால் விரும்பப்படுகிறது. இவை 90 நாட்கள் முதல் 105 நாட்கள் வயது வரை உள்ளதாகும். பரவலாக கொடி கொட்டை என்பது திருவண்ணாமலை பகுதியில் மட்டும் சாகுபடியில் உள்ளது. நிலத்திற்கு அதற்கு ஏற்ப பவுடர் போல் நிலத்தில் உழவு அமைய வேண்டும். நிலக்கடலையில் மகசூல் அதிகரிக்க நிலத்தை தங்கம்போல் பராமரிக்க வேண்டும்.
மானாவாரி சாகுபடி என்பது செயற்கை பாசனத்தை நம்பியிராமல், முற்றிலும் இயற்கை மழைநீரையே நம்பி செய்யப்படும் வேளாண்மை முறையாகும். தமிழ்நாட்டின் கோவில்பட்டி, ராமநாதபுரம் போன்ற வறண்ட பகுதிகளில் இப்பயிர்கள் பருவமழைக்காலத்தை (ஆடிப்பட்டம்) மட்டுமே சார்ந்து பயிரிடப்படுகின்றன.
நிலக்கடலை விதைப்பிற்கு
இயற்கை உரங்கள் அவசியம் தேவை. 30 நாட்களுக்கு முன்னர் நாட்டு கம்பினை ஏக்கருக்கு
10 கிலோ விதைப்பு செய்து இரண்டு அடி உயரம் இருக்கும் போது மடக்கி உழவு செய்து மணிலா
சாகுபடி செய்தால் போதும்.விவசாயிகள் 70 மூடைகள் மகசூல் எடுத்துள்ளனர். கம்பில் வேர் முண்டுகள்
அதிகம் இருப்பதால் மணிச்சத்து இயற்கை சத்து பூமிக்கு கிடைப்பதால் நிலக்கடலை மகசூல்
கூடுகின்றது. சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், கார்த்திகைப்பட்டம்
என்று உள்ளது. இதில் பரவலாக மார்கழிப் பட்டம்தான் அதிக அளவில் சாகுபடியில் உள்ளது. ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள்; ஒரு ஏக்கருக்கு
1,32,000 செடிகள் பயிரிடப்படுகின்றன.
6.7.2026

No comments:
Post a Comment