Search This Blog

Tuesday, July 22, 2025

முத்தொள்ளாயிரம் !! - majestic elephant !!


ஒரு கம்பீரமான யானையின் படம்.  கொஞ்சம் தமிழ் இலக்கணம்.  தொகை நூல் என்றால் என்ன !  முத்தொள்ளாயிரம் என்ற நூலை அறிவீரா !!  



பலரால் பாடப்பட்ட பாடல்களோ, நூல்களோ ஒரே தலைப்புப் பெயரின் கீழ் தொகுக்கப்பட்டுப் தரப்படும்போது அவை தொகைநூல்கள் எனப்படுகின்றன. இத் தொடரில் தொகை என்னும் சொல் 'கூட்டுத்தொகை'.  

My love for elephants continues .. .. a majestic Tusker,  but more on Tamil literature in this post ! 

பனிக்கடலுள் பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே

எங்கோமான் காய்சினவேல் கிள்ளி களிறு. : - 

                     கிள்ளியின் யானை கடலில் செல்லும் நாவாய்க் கப்பல் போலத் தோன்றுகிறது. எப்படி? நாவாய் கடலில் பாயும். களிறு வேல் தாங்கிய கோட்டைக் கதவுகளின் மீது பாய்ந்து அழிக்கிறது. : முத்தொள்ளாயிரம் தமிழ் இலக்கியத் தொகை நூல். 

முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூல்.   இந்நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது.   சிவபெருமான் நாள்மீன்களையும், திங்களையும், சூரியனையும் படைத்தவன் என்றும், ஆனால் உலகம் அவனை ஆதிரையான் என்பது வியப்பானது என்றும் கூறுகின்றார் ஆசிரியர். மேலும், தாம் பாண்டியனைப் புகழ்ந்து பாடும் பாட்டு, மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகப்பெருமானைக் கடப்ப மலர் தூவிப் பாடிப் புகழ்தலை ஒத்தது என்கிறார். இதனால் இவர் சைவ சமயச் சார்புடையவர் என்பது விளங்கும். 

முத்தொள்ளாயிரப் பாடல்களை முதன்முதலில் இரா. இராகவையங்கார் 1905-ஆம் ஆண்டில் பாண்டித்துரைத் தேவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான செந்தமிழ்ப் பத்திரிகை மூலம் வெளியிட்டார்.அவர் இந்நூலினை ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று குறிப்பிட்டுப் பதிப்பித்த அப்பதிப்பில் 110 வெண்பாக்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Regards – S Sampathkumar
22.7.2025

No comments:

Post a Comment