Search This Blog

Monday, June 12, 2023

Flower - Blossom! - நெஞ்சிலே என்ன பூ ?!?!?

 Are they really flowers in its real sense ! – they do not give aroma nor kept on the hair of women –  they are in fact  edible part of the tropical species of the tree (Musa acuminata). This cone-shaped flower has a dark red-orange or maroon hue and is consumable as curries, salads, cutlets, and soups.  The blossoms are  completely edible delicacy.  The flowers form deep within the stem of the  plant, long before they appear to us. The flowers occur in groups called hands, and the hands are arranged into larger clusters of flowers.  

Wonder what !!   -   the literal translation would be ‘Banana flower’ – it is called Banana blossom, or  “banana heart”,  a fleshy, purple-skinned flower, shaped like a tear, which grows at the end of a banana fruit cluster.   

வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும்  !  அண்ணாமலையான ரஜினிகாந்த் லிப்ட் படிகளில் மேலேற, சரத்பாபு கீழே இறங்குவார் !  - ஒரே பாடலில் வாழ்க்கை மாறும்.  பால்காரரான சைக்கிள் ஓட்டும் அண்ணாமலை –  கொண்டையில் தாழம்பூ,  நெஞ்சிலே வாழைப்பூ !! (அது என்ன நெஞ்சிலே !!)  - படம் பார்ப்பவர்களை பார்த்து -  கூடையில் என்ன பூ  - என வினவுவார் ? 

Browsing something landed on a recipe page in a Foreign magazine – which read - Upton’s Naturals lightly cooks the blossoms in a brine of lime juice and sea salt. The company suggests the texture is like seafood, and offers recipes for frying them !!  - interested in knowing ?   

Using flowers as a garnish is everybody’s choice – traditionally   , we’ve always used flowers in our dishes, not necessarily  as a garnish. India has consumed edible flowers for aeons - You are looking at a flower that gives  so much of health benefits.  

பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை.  பல நறுமணம் வீசுபவை .. .. சில சாப்பிட நல்ல ஆரோக்கியத்தை தருபவை.    பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன.   நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது 'வாழைப்பூ' .  அகத்தியர் குணபாடத்தில் வாழைப்பூவின் பயன்கள் பற்றிப் பாடலாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. 

வலை தேடலில் வாழை பூ சர்வரோக நிவாரணி போன்றே சித்தரிக்கப்பட்டுள்ளது.  இன்றைக்கு மனிதகுலத்தை வாட்டும் நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று.  சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள்,    வாழைப்பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்!   தவிர, இது மலச்சிக்கல், உதிரப்போக்கு, போன்ற பலவற்றை குணப்படுத்த நல்லதாம் ! 



வாட்டி வதைக்கும் வெயிலால், பலருக்கு உடல்சூடு ஏற்படும். சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால், உடல்சூடு தணியும் !!  வாழைப்பூ   அஜீரணக் கோளாற்றை சரி செய்யவல்லதாம் !! 

'வாழையடி வாழையாக வாழ வேண்டும்' என்பது பழமொழி. நம் ஆயுளையும் வாழையடி வாழையாக அதிகரிக்கச் செய்யும் வாழைப்பூ சிறந்த பூ என்பதில் சந்தேகம் இல்லை.

Interesting !

With regards – S. Sampathkumar
12.6.2023

No comments:

Post a Comment