Search This Blog

Friday, December 1, 2023

those eyes stared at me ! - கண்மணியே காதல் என்பது கற்பனையோ

பார்த்த விழி பார்த்த படி - நோக்கி இருக்க !! 

தமிழ் சினிமாவின் கிளிஷே !  - அழகான படித்த பணக்கார பெண், பஸ்ஸில் பயணம் செய்வாள் ! ஒரு கும்பலே அவள் பின்னால் அலையும் !  - படிக்காத முரட்டு தாடிக்கார ஹீரோ அவள் முன் சாகசம் செய்வான்.  கூட இருக்கும் காமெடி நடிகன் சொல்வான் - அவள் உன்னை விரும்புகிறாள், அவள் பார்வை உன்மீது தான் உள்ளது !! பார், கொஞ்சம் தூரம் சென்று மறுபடி உன்னை திரும்பி பார்ப்பாள்.  அழகு கதாநாயகி காதல் வயப்பட்டு ஹீரோ மனசு எவ்வளவு நல்லது தெரியுமா என  தன் பெற்றோரிடம் சண்டையிட்டு மணமேடையில் இருந்து ஓடி வருவாள் !! 



சினிமா கதை அல்ல இந்த பதிவு ! - கண்கள் பற்றியது ! -  ஓர் நல்ல மழை நாளில் - நான் அந்த பெரிய கட்டிடத்தின் பார்வையாளர் அறையில் அமர்ந்து இருந்த போது, என்னை யாரோ உற்றுப்பார்ப்பது போல உணர்ந்தேன்.  எங்கோ மழை சப்தத்தின் இடையில் SPB குரல் ராகதேவன் இளையராஜா இசையில் காதில் ரீங்கரித்தது.

பார்வையின் ஜாடையில் தோன்றிடும்

ஆசையில் பாடிடும் எண்ணங்களே

கொஞ்சம் மூளையை !! கசக்கியதில் - இளம்வயது ரஜனிகாந்த் + படாபட் ஜெயலட்சுமி நடித்த ஆறில் இருந்து அறுபது வரை படம் நினைவில் வந்தது. 

கண்மணியே காதல் என்பது கற்பனையோ; காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள்; நெஞ்சினில் பொங்குதம்மா

பல்சுவையும் சொல்லுதம்மா

உங்கள் கண்களால் எவ்வளவு விஷயங்களை ஒரே சமயத்தில் காணமுடியும் ??  நல்ல முறையில்  கண்கள் பராமரிக்க,  20-20-20 விதியை கடைபிடிக்க வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது !!  - ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், உங்கள் கணினியிலிருந்து விலகி, உங்களிடமிருந்து 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பாருங்கள். கண் வறட்சியைத் தடுக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 படிகள் நடக்கவும்!!  கம்ப்யூட்டர் பார்க்கவும் !! 20

அடி எவ்வளவு தொலைவு !! - இப்படி எண்ணம் ஓட்டம் ஓடி - மறுபடி தலையை தூக்கியபோது மறுபடி அந்த கண்கள் என்னையே பார்ப்பதை உணர்ந்தேன் !  வயசு கூடினாலும் மனதில் இளவயது எண்ணங்கள் ஓடுவது இயல்பானது !!  பழைய நாட்கள் நினைவில் வந்து போயின !!  எழுந்தேன், அருகில் சென்றேன், அந்த கண்களை ரசித்தேன்.  அவள் வீட்டாரோடு பேசினேன் ! அவர்கள் சம்மதித்தனர்.  ராஜாவின் ஆயிரம் வயலின்கள் எல்லாம் கதாநாயகர்களுக்கு தான் ஒலிக்கும். நமக்கல்ல

How much you can see – meaning – the wide angle say from left to right – how much you can see while in a stadium or elsewhere !! Visual angle is the angle a viewed object subtends at the eye, usually stated in degrees of arc. It also is called the object's angular size.  We have two eyes – so also many animals and birds but the location could be different.  Birds and fish have eyes on their sides !!   Having two eyes means one can see a three dimensional image of what’s around them. So they can perceive the height, width and depth of an object, as well as how far away it is. Pigeons and parrots like most birds have eyes on sides , then there is Owl  that has large eyes placed close together at the front of their heads – a bit like ours.  The field of view (FOV) is the extent of the observable world that is seen at any given moment.  



அந்த கண்களை பற்றி உங்கள் மனதில் வந்த கனா, கற்பனை, உண்மை கதைகளை எல்லாம் நிதானமாக நினைத்து சந்தோஷப்படுங்கள்.  என் சொந்த கதையை நான் இங்கே சொல்ல போவதில்லை !  அவர்கள் வீட்டார் சம்மதத்துடன் ஒரு புகைப்படம் எடுத்தேன். அவ்வளவுதான். நான் கண்ட அந்த (அல்லது என்னை உற்று பார்த்து) கவர்ந்த கண்களின் படம் இங்கே



ஆசாமி சிரிப்பு சிந்தனையானின்   எண்ண முத்து -  கற்பனைக்கதை !!
With regards – S Sampathkumar
1.12.2023 

No comments:

Post a Comment