Search This Blog

Friday, December 11, 2020

பார்மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்! : celebrating birth of Subramaniya Barathiyar

வந்தே மாதரம் என்போம்-எங்கள்  மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.

- என்ற வரிகளை கேட்டு மெய் சிலிர்த்தது உண்டா ?


 

பார்மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!

மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான் !!,

மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,

நலிவுமில்லை;  சாவுமில்லை,கேளீர்,கேளீர்!  

சுப்ரமணிய பாரதியார் ~ ஒரு உன்னத பிறவி.   கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி - தன்  காலத்துக்கு  மிகவும் பல்லாண்டுகள்  பிறகு நடக்க வல்லவை பற்றி  கூர் நோக்குடன் சிந்தித்தவர்.  நம் கருத்துக்களை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒருநாள் கண்ணன் கேட்டார். அதற்கு பாரதி,  ‘ஏனெனில் நம் கருத்துக்கள் இன்னும் நானூறு ஆண்டுகள் கழித்து சொல்லப்பட வேண்டியவை. இவர்களால் புரிந்துகொள்ள முடியாது’ என்றார்.  பாரதி மஹாகவி மட்டுமல்லன் ! ~ கவிதை அவர்க்கு சரஸ்வதி தேவியின் வரம்.  அவரது சிந்தனை, வார்த்தைகள்,  செயல் எல்லாமே தேசபக்தி. விடுதலை உணர்வு ~  ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த பாரதத்தை   உலுக்கி   எழுப்பின  அவர்தம்  பாடல்கள். அவர்தம் எண்ணங்கள் காலத்தை கடந்தவை.  உண்மையிலேயே அவர் தாம் வாழ்ந்த காலத்தினை தாண்டி சிந்தனை கொண்ட தீர்க்கதரிசி.

  

Today 11th  Dec  is a day to remember ~ it marks the 137th birth   anniversary of the greatest poet, a great son of India – Mahakavi Subrahmanya Barathiyar.  

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய

முப்பது கோடி ஜனங்களின் சங்கம் - முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம்  - உலகத்துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)

~ என்று நம் தேசத்தை வியந்த எந்தை எங்கள் மஹாகவி ஒப்புயர்வற்ற ஞானி தீர்க்கதரிசி அஞ்சாநெஞ்சன் சுதந்திர போராட்ட மாவீரன் சுப்பிரமணிய பாரதி!

 

The man who was to become an iconoclastic freedom fighter was born in a small village called Ettayapuram on Dec 11, 1882. His  parents  Chinnasami Subramanya Iyer and Lakhsmiammaal named him Subbaiah.  From a very young age he learnt music and at 11th , he learnt songs; he was conferred the title of "Bharathi" (one blessed by Saraswati, the goddess of learning).  Interestingly, this is what he claimed himself to be (at a much later stage !)

 

நமக்குத் தொழில்கவிதை,  நாட்டிற்கு உழைத்தல்*

இமைப் பொழுதுஞ் சோராதிருத்தல்- உமைக்கினிய

மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;

சிந்தையே! இன்மூன்றும் செய்.

 

He prayed Lord Siva (Umainathan) to bless the community stating that his avocation was ‘writing poetry, working for mother land and persevering without battling eye-lid for the cause’ – appeals blessing for these three !

 

                    ~   இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன், எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர்“சுப்பிரமணிய பாரதியார்”என அழைக்கப்பெற்றார்.  

 Sri Kannan purappadu and Barathiyar residence at Thiruvallikkeni




Bharathi started his own journal India in 1906 and published his fiery patriotic poems and blunt anti-colonial articles. His association with V. O. C. became more intimate, the latter floated his Swadeshi Steam Navigation Company in 1906. Bharathi helped him in getting contributions for shares in the company and donations. The great man hailed as Kappalottiya thamizhan fought  Imperial British traders challenging them at sea.  Irked by this, VOC  was subsequently foisted with  serious charges of sedition and conspiracy, which got him two life terms of rigorous imprisonment whence he was physically assaulted and humiliated.  Barathiyar too underwent harassment and was severely injured in prison, which infact led to his death.  



By his songs and concerted actions, he reached to the masses making the aware of the need for freedom struggle and could make a great movement in Southern part of the Nation.  He was a fiery leader with progressive leader and great vision, clearly a man who lived much beyond his age and foresaw things clearly.  Bharathi supported Tilak and Aurobindo together with V. O. Chidambaram Pillai and Kanchi Varathaachariyar. Tilak openly supported armed resistance against the British. In 1908, he gave evidence in the case which had been instituted by the British against V.O. Chidambaram Pillai. In the same year, the proprietor of the journal India was arrested in Madras. Faced with the prospect of arrest, Bharathi escaped to Pondicherry which was under French rule. From there he edited and published the weekly journal India, Vijaya, a Tamil daily, Bala Bharatha, an English monthly, and Suryothayam, a local weekly of Pondicherry. The British tried to suppress Bharathi's output by stopping remittances and letters to the papers. Both India and Vijaya were banned in British India in 1909.  

His poetry stands out for many facets of his love for his motherland. He berates his countrymen for many social evils. He chastises them for a fearful and pusillanimous attitude towards the rulers. He gave a clarion call for national unity, removal of casteism and the removal of oppression of women. He calls for the British to leave the motherland in forceful ways at one point saying "Even if Indians are divided, they are children of One Mother, where is the need for foreigners to interfere?".  

The land of Pondicherry bears connection to this great revolutionary.  Apart from running journals and magazines from here, he sung about the famous deity of Pondy ~ “Manakula Vinayagar” in his Vinayagar Nanmani Maalai [விநாயகர் நான்மணி மாலை] – by some accounts this was published out of handwritten manuscripts in 1929 posthomously.  

 

Bharati’s knowledge of the happenings around him, and all over the world was accurate and detailed. As a journalist, who had to deal with international matters, he read almost all the English newspapers, especially those published from England. He discussed in his articles many matters relating to the freedom of India, its economic, political, artistic and spiritual growth, in comparison with other nations, who were caught in a similar predicament.

An Organisation ~ “Vaanavil Panpattu Maiyam”  has been celebrating the birth anniversary of Mahakavi every year, by organizing various programmes at Triplicane at the house where Bharatiyar resided.   This year due to Corona, perhaps it is muted – this morning there would be ‘jathi pallakku’ purappadu from Sri Parthasarathi swami temple (near thirukulam) to the house in Thulasingaperumal Koil Street where he resided.    

 

In the words of Bharathi, those who are truly devoted would not be impatient and would not do things in a hurry for they know how life grows out steadily out of seed; and for those who are given to understanding the divine power is everything ~ also know that all they need to do is to work with esteem rest being taken by Divine shakthi. 

பக்தியுடையார் காரியத்திற் பதறார், மிகுந்த பொறுமையுடன்

வித்து முளைக்குந் தன்மைபோல் மெல்லச்செய்து பயனடைவார்,

சக்தி தொழிலே அனைத்துமெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?

வித்தைக்கிறைவா, கணநாதா, மேன்மைத் தொழிலிற் பணியெனையே. 

 

Fortunate to live in the land where great people like Bharathiyar lived and happy to be participating in such events. 

With great reverence to the poet – S. Sampathkumar.
11th Dec 2020

  








2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பாரதியின் மீது உள்ளார்ந்த அன்போடும் பற்றுதலோடும் எழுதப்பட்டுள்ளது.. மிக சிறப்பாக உள்ளது.

    ReplyDelete