திருவல்லிக்கேணி
முத்து மாரியம்மன் திருக்கோவில்
எண்ணற்ற திருக்கோவில்கள் கொண்ட திருவல்லிக்கேணி திவ்யதலத்தில் - கைரவிணி குளக்கரையில் வடக்கு பக்கம் செல்லும் ஒரு சந்தின் முனையில், ஆரிமுத்து தெருவில் உள்ளது அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோவில்.
முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒரு உயர்ந்த பொருள். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மாரி என்பது மழையை குறிக்கும், அம்மா என்பது தாய் - இறைவியே தாய். மனிதர்களுக்கு துன்பம் வருவது இயல்பு; அந்த துன்பத்தை இன்பமாகும் சக்தி இறைவன் ஒருவருக்கே உண்டு. இறைவன் மனதை குளிர்வித்தால் அவர் தானாக நம் மனதை குளிரச்செய்வார். மனதளவில் மக்கள் சோர்வுறும் சமயங்களில் மாரியம்மன் மீது இறை வணக்க பாடல்களை பாடினால், அம்மன் மனம் குளிர்ந்து, கவலையை போக்குவாள். நல்லவைகள் செய்வாள்.
தேடியுனைச்
சரணடைந்தேன், தேசமுத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய். .. ...
பாடியுனைச்
சரணடைந்தேன்; பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ்
செய்திடுவாய், குறைகளெல்லாம் தீர்ப்பாய்.
ஆடி மாதத்தில் இன்று திருவீதி வலம் வந்த அருள்மிகு முத்துமாரியம்மன்
படங்கள் சில இங்கே :
12.8.2024
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment