Search This Blog

Sunday, November 30, 2025

Auto Mantra : சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் !!!!

சீறும் பாம்பை நம்பு !!  சிரிக்கும் பெண்ணை நம்பாதே !

 

இது ஏதோ முதுமொழியோ அல்லது சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட கருத்தோ அல்ல ! -  இந்த சென்னை மாநகரத்தில் நம் கண்ணில் பளிச்சென்று பட, ஆட்டோக்களின் பின்புறத்தில்   பொன்மொழிகளையும், தத்துவங்களையும், கவிதைகளையும்கூட எழுதி வைத்திருப்பார்கள்.  இவற்றின் மூல படைப்பாளி யார் என்பது தெரியாது !!  இதோ இங்கே சங்க பாடல்

 

நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின்

முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்

கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே

குறி கொண்டு மரம் கொட்டி நோக்கி . .

 

மரமடர்ந்த காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத வழியில் செல்லக் கூடாது. அங்கு வெடிப்பு நிலங்களில் பரல் கற்கள் மூடிய வளைக்குள் பாம்பு இருக்கலாம். பின்னே வருபவர்களுக்கு வழி தெரிவதற்காக மரத்தைக் கல்லால் கொட்டி அடையாளம் செய்து வைத்துவிட்டுச் செல்லுங்கள். அப்படிப்பட்ட இடங்களைக் காணும்போது விறலியர் அதனைச் சுற்றிவந்து வாழ்த்துவர். அவ்வாறு செய்துவிட்டுச் செல்லுங்கள்.  விறலியர் என்பவர்கள் சங்ககாலப் பெண்குரல் இசைக் கலைஞர்கள். விறலியர் இசைக்கருவிகளுடன்  பாடி, பண்ணிசைக்கேற்ப ஆடுவர்.   பாணர்களுடன் இணைந்து கலைகளை நிகழ்த்தியவர்கள் என குறிப்பிடப்படுகிறார்கள்.

 

இந்த பாடல் உள்ள நூல் - சங்க இலக்கியத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல்.  583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்; பாடப்பட்டவன்:- நன்னன் வேண்மான்; திணை:- பாடாண் திணை; துறை:- ஆற்றுப்படை.    இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

 

Here is another captivating Auto mantra

 

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை

சுப்ரமணியர்க்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை !

 

நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியை சுக்கு என அழைக்கிறோம். சுக்கு எளிதில் கெடாது. இதனால் உலர்ந்த இஞ்சியான சுக்கு என்பது இஞ்சியை விட அதிக நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். சுக்கை மசாலாப் பொருளாகவோ மருந்தாகவோ அனைத்து பருவங்களிலும் பயன்படுத்தலாம்.

 


Auto mantra : * there is no other better medicine than dry ginger

~ and there is no God other than Lord Subramaniya **

 

Morning wisdom from  தெருவோர பொழுதுபோக்குவான்

 
Regards – S Sampathkumar
30.11.2025 

No comments:

Post a Comment