Search This Blog

Showing posts with label Thirukkural. Show all posts
Showing posts with label Thirukkural. Show all posts

Friday, May 22, 2026

Angry man !! ~ “சினம் தாங்கின் மனிதன்;"

 

How angry are you !! – are there any index to say – good anger, bad anger, highly angry .. .. !!  ‘Anger is one word short of Danger” and it destroys you !! 

“சினம் தாங்கின் மனிதன்; சினத்தால் வீழ்ந்தால் மனிதன் இல்லை.” 

There are some who are angry, frustrated – yes, things are not alright everywhere, there are malaises in the society but what purpose is served in being angry, make some hate posts in social media, early in the morning, mid afternoon, evening and before going to sleep !!! 

Anger is a strong, intense emotion that arises when you feel threatened, blocked from a goal, or treated unfairly. It is considered one of the basic human emotions, alongside happiness, sadness, fear, and disgust. Anger usually brings feelings of irritation, frustration, or rage, often along with physical signs like faster heartbeat, muscle tension, or a rise in body temperature. Subjectively, it can feel like “heat” inside, a desire to yell, argue, retaliate, or make someone “get out of my way.” 

Making life simple leads to happiness -  ~ the key to peaceful living is reduction (if not elimination) of conflicts .. .. [quote of the day of Swami Summa(r] Anandha] 

Ever played the game “Angry Birds” – it was a very big hit as it allowed people express their emotions.  The characters are very simple: round, brightly colored birds with exaggerated angry faces, making them easy to recognize and remember.   The “concept” is a simple, cartoony game idea built around a flock of birds who are angry because green pigs have stolen their eggs. 

Here is something on what Thiruvalluvar has to say on the need to control anger !! 

 

ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க;  திருவள்ளுவர் திருக்குறளில் "வெகுளாமை" என்ற அதிகாரத்தில் சினம் அடக்குதலின் அவசியத்தை மிக ஆழமாக விளக்கியுள்ளார். சினம் (கோபம்) தன்னைத்தானே அழிக்கும் நெருப்பு என்றும், அதனைத் தடுத்துக் காப்பவரே உண்மையான அறிவாளி என்றும் அவர் கூறுகிறார்.

 

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

 

தன்னை காத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஒருவன் அவனுடைய சினத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒருவர் தன்னுடைய சினத்தை கட்டுப்படுத்தவில்லையென்றால் அச்சினம் அவரையே வதைக்கும் / துன்பப்படுத்தும். ஏன் எனில் சினம் என்பது நெருப்பு. அது நம்முள் வெம்மையினை உமிழ்ந்துக்கொண்டே இருக்கும். அது நமது மன நலத்தை சீர் குலைக்கும் மகிழ்ச்சி சென்றுவிடும். நமது உடலுக்கும் கேடு விளைவிக்கும். கோபம் நம்மை ஒரு பதற்ற நிலையில் வைக்கும். அந்த நெருப்பு தனிவதும் கடினம். மேலும் கோபம் நம் முடிவு எடுக்கும் ஆற்றலை குலைத்து விடும். நாம் விளைவுகளை எண்ணாது தவறான முடிவுகளை எடுப்போம்.

 


Here is a raging goat ! – about to bang its head – not sure of what could be impact but for sure, it hurts itself in the process.  Control Anger

 

Regards – S Sampathkumar

22.5.2026

Friday, April 24, 2026

life is all about sharing !!

 

Life is all about sharing !!

 


காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள.

(அதிகாரம்: சுற்றந்தழால் குறள் எண்:527): 

காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

Monday, February 2, 2026

Water lilies ~ வெள்ளத்தனைய மலர்நீட்டம்

 

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

 

திருவள்ளுவரின் திருக்குறள்    595  - பொருட்பால்  ; அதிகாரம்-  ஊக்கமுடைமை   

Picture of water lilies (Nymphaea) and their large, floating green lily pads in a tranquil pond setting. Water lilies are aquatic plants belonging to the genus Nymphaea. They are rooted in the mud at the bottom of the pond, with their leaves and flowers growing through the water and floating on the surface.

 


நீரின் அளவுக்கேற்பத் தாமரைத் தண்டு நீண்டு மலர்வது போல, மக்களின் வாழ்க்கையின் உயர்வு அவர்களின் மன ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே அமையும். அதாவது, மன உறுதி மற்றும் முயற்சி (ஊக்கம்) அதிகமாக இருந்தால், வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைய முடியும். 

அல்லி (Water lily).  அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும்.  இவை குளம், பொய்கை, நீர்ச்சுனைகள் மற்றும் மெதுவாக ஓடும் ஆறுகளில் காணப்படுகின்றன. அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. அல்லிப் பூக்கள் பொதுவாக இரவில் மலர்ந்து காலையில் இதழ்களை மூடிக்கொள்ளும் (கூம்பும்). 

 திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வீற்றிருக்கும் அம்மனின் (பராசக்தி) திருநாமம்  - அல்லியங்கோதை.  இவர் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் உள்ள மூலஸ்தானத்து பெருமான் புற்றிடங்கொண்டாருக்கு போகசக்தியாக வழிபடப்படுகிறார்.

 
Interesting !
 
Regards – S Sampathkumar
2.2.2026

Friday, November 21, 2025

Valluvar Kottam ~ from a few Kilometers away !!!!!

Valluvar Kottam (வள்ளுவர் கோட்டம்) stands tall in Chennai – dedicated to the  classical Tamil poet philosopher Thiruvalluvar, it   located at the intersection of the Kodambakkam High road and the Village road in Nungambakkam area.   The monument now stands at what was once the deepest point of a local lake called the Nungambakkam lake 

நகல்" என்பது ஒரு அசல் பொருளின் பிரதி, பிரதிபலிப்பு அல்லது படியெடுத்தலைக் குறிக்கிறது. இது ஒரு கலைப் படைப்பின் மற்றுமொரு பதிப்பு, ஒரு ஆவணத்தின் பிரதி (எ.கா., சட்ட அல்லது பள்ளி ஆவணங்களின் நகல்), அல்லது வணிக நோக்கங்களுக்காக எழுதப்படும் விளம்பர வாசகங்கள் போன்ற பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. "நகல்" என்பது 'copy' என்பதன் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பாகும்.  

தமிழ் ஒரு அற்புத மொழி.   நகு என்பது சிரி என்று பொருள் படும். இடுக்கண் வருங்கால் நகுக எனுமிடத்தில்   - துன்பம் வரும்போது, அதற்காக கலங்காமல், அதை சாதாரணமாக கொண்டு சிரித்தல் [நகுதல்] வேண்டும்.  "நகைத்தல்" என்ற தமிழ் வார்த்தையின் பொருள் சிரித்தல் என்பதாகும்.  நகல்  எனும் வார்த்தைக்கு - சிரிக்கை (சிரிப்பு), மகிழ்ச்சி (தம்முட் குழீஇ நகலி னினிதாயின்(நாலடி, 137)), நட்பு (நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு (குறள், 860)) ; எனும் பொருளும் உண்டு.  

இதோ இங்கே செந்நாப்போதாரின் ஒரு திருக்குறள் :  

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள். 

நகல்வல்லர் "நகல்வல்லர்" என்பது சிரித்துப் பழகும் திறன் கொண்டவர் அல்லது மற்றவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகும் திறன் கொண்டவர் என்பதாகும்.  நல்ல பண்பு இல்லாமையும்  மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பும்  இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

 


Photo of Valluvar kottam taken from a good 2 km or more – from Office building at Bazullah Road, Chennai 17 in Nov 2020.

 
Interesting !
 
Regards – S Sampathkumar
21.11.2025 

Wednesday, July 23, 2025

Cat wisdom !! ~ பொய்யாமை பொய்யாமை ஆற்றின் !!

 

மனிதர்களில் பலர் - உடல் உபாதைகள் தவிர, மன உளைச்சலாலும் அவதி படுகின்றனர்.  உற்றார், உறவினர், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடத்திலும் வன்சொல், தவறான சொற்கள், ஏலாப் பொய்கள், என - வார்த்தைகள் மனிதர்கள் வாழ்வில் கெடுதிகள் செய்து கஷ்டப்படுத்துகின்றன. 

அன்றொரு நாள் அந்த அற்புத திருக்கோவில் வாயிலில் ஒரு மஹானிடம் இந்த பிரச்னைகளுக்கு அருமருந்து தான் யாது என வினவினேன் !  - அவரோ ஒரு இடத்தை சுட்டிக்காட்டி விட்டு அகன்று விட்டார்.  அவ்விடத்தில், ஒரு வித்தியாசமான கோணத்தில், தன் புலன்களை, கால்களை அடக்கி ஒரு வெள்ளை பூனை அமர்ந்து இருந்தது. 

வீடு திரும்பி யோசித்தால் - உணர்ந்தது - அந்த பூனை போன்று கோப தாபங்களை - அடக்கி, வீண் வார்த்தைகள் தவிர்த்து, அமைதியாக அமர்தலே - நல்வாழ்க்கைக்கு உதவும் !!   செந்நாப்போதார் திருவள்ளுவ பெருந்தகை இதையே - 30 - வாய்மைஅதிகாரத்தில் - குறள் 297ல்  உரைக்கின்றார்.   

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.  

பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.  பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று',எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர்.

 


Words of wisdom learnt from posture of a Cat by Allikkeni commoner – sirippu sinthanaiyalan – yours truly
 
S. Sampathkumar
23.7.2025