வெள்ளத்
தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்
தனையது உயர்வு.
திருவள்ளுவரின் திருக்குறள் 595 - பொருட்பால் ; அதிகாரம்- ஊக்கமுடைமை
Picture
of water lilies (Nymphaea) and their large, floating green lily pads in a
tranquil pond setting. Water lilies are aquatic plants belonging to the genus
Nymphaea. They are rooted in the mud at the bottom of the pond, with their
leaves and flowers growing through the water and floating on the surface.
நீரின் அளவுக்கேற்பத் தாமரைத் தண்டு நீண்டு மலர்வது போல, மக்களின் வாழ்க்கையின் உயர்வு அவர்களின் மன ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே அமையும். அதாவது, மன உறுதி மற்றும் முயற்சி (ஊக்கம்) அதிகமாக இருந்தால், வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைய முடியும்.
அல்லி (Water lily). அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இவை குளம், பொய்கை, நீர்ச்சுனைகள் மற்றும் மெதுவாக ஓடும் ஆறுகளில் காணப்படுகின்றன. அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. அல்லிப் பூக்கள் பொதுவாக இரவில் மலர்ந்து காலையில் இதழ்களை மூடிக்கொள்ளும் (கூம்பும்).
திருவாரூர்
தியாகராஜர் கோயிலில் வீற்றிருக்கும் அம்மனின் (பராசக்தி) திருநாமம் - அல்லியங்கோதை. இவர் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் உள்ள
மூலஸ்தானத்து பெருமான் புற்றிடங்கொண்டாருக்கு போகசக்தியாக வழிபடப்படுகிறார்.
2.2.2026

No comments:
Post a Comment