Search This Blog

Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Tuesday, August 11, 2026

பசுவுண்ட தேம்படு தண்ணீர் அமுதமாம் !! ~ நேர் படப் பேசு

 

பசுவுண்ட தேம்படு தண்ணீர் அமுதமாம் !! ~ நேர் படப் பேசு

A nice looking Cow heading straight towards me … a photo and some Tamil literature on Cow and Sangam poem on the water drunk by Cow !!



தமிழில் “பசு” என்ற சொல் விலங்கைக் குறிக்கும் பொருளைத் தவிர, சைவசித்தாந்தத்தில் உயிர் அல்லது ஆன்மா என்ற தத்துவப் பொருளிலும் வருகிறது. பதி–பசு–பாசம் என்ற முப்பொருள் கோட்பாட்டில், பசு = ஆன்மா, பதி = இறைவன், பாசம் = ஆன்மாவைக் கட்டுப்படுத்தும் பந்தங்கள்.

“பசுவுண்ட தேம்படு தண்ணீர் அமுதமாம்” என்பது அறநெறிச்சாரம் என்னும் நூலில் வரும் நீதிக் கருத்துடைய பாடலின் ஒரு பகுதி. தமிழ் இலக்கியம் மற்றும் பழைய அகராதிகளில் பசுவுக்கு வழங்கப்படும் பெயர்கள் பல உள்ளன. அவற்றில் சில நேரடிப் பெயர்கள்; சில கூட்டுப்பெயர்கள் அல்லது குறிப்பிட்ட வகைப் பசுவைக் குறிக்கும் பெயர்கள்.

பசுவின் பொதுப் பெயர்கள்:   பசு;   ஆ; ஆன்; கோ; பெற்றம்; தேனு; கபிலை; சுரபி; குரால்; குரம்; கூலம்; கோமளம்; சுரை; பத்திரை;    சுதை; வற்சலம்; வற்சை. “ஆ”, “ஆன்”, “கோ”, “பெற்றம்” ஆகியவை பசுவுக்கும் காளைக்கும் பொதுவாக வழங்கப்படும் பெயர்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஒரு பொருளின் மதிப்பு  அது யாரிடம் சேர்கிறது என்பதே தீர்மானிக்கிறது. பால் பாம்பிடம் சென்றால் நஞ்சாகிறது; தண்ணீர் பசுவிடம் சென்றால் பால் போன்ற பயனுள்ள பொருளாகிறது. அதுபோல அறிவு மட்டும் போதாது—அதைப் பயன்படுத்தும் மனிதரின் பண்பு, நோக்கம், ஒழுக்கம் ஆகியவையே அதன் விளைவைக் கட்டுப்படுத்துகின்றன.

 

பாம்புண்ட பால் எல்லாம் நஞ்சாம்; பசுவுண்ட

தேம்படு தண்ணீர் அமுதமாம் — ஓம்பற்கு

ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம்; அதுபோல்

களியாம் கடையார்மாட்டு.

 

அறநெறிச்சாரம் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார்;  இவர் சமண சமயத்தைச் சார்ந்த அறிஞராகக் கருதப்படுகிறார். இந்நூல் பொதுவாக கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், 226 வெண்பாக்கள் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் சில பாடல்களுக்கு புறத்திரட்டில் கிடைக்கும் வடிவங்கள் முக்கியமான பாடச்சான்றுகளாக அமைந்தன. இதனால், உ.வே. சாமிநாதையர் இதனை “எனக்குக் கண்ணைக் கொடுத்த நூல்” என்று பாராட்டியதாகக் கூறப்படுகிறது. அதாவது, சிதைந்தோ மாறுபட்டோ கிடைத்த பாடல்களின் சரியான வடிவத்தை அறிய இந்நூல் உதவியது. பதினெண்கீழ்க்கணக்கு என்பது சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய 18 தமிழ் நூல்களின் தொகுப்பு. இவற்றில் பெரும்பாலானவை அறம், ஒழுக்கம், வாழ்வியல், காதல், போர் போன்ற கருத்துகளை எடுத்துரைக்கின்றன. நினைவில் கொள்ள உதவும் பாரம்பரியத் தொடர்:

**நாலடி நான்மணி நானாற்பது

ஐந்திணைமுப் பால் கடுகம் கோவை

பழமொழி மாமூலம்

இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி

என்பதூஉம் கைந்நிலையும் ஆம் கீழ்க்கணக்கு**

இங்கே “முப்பால்” என்பது திருக்குறளையும், “மாமூலம்” என்பது சிறுபஞ்சமூலத்தையும் குறிக்கிறது.

Interesting !

Regards – S Sampathkumar

11.8.2026

 

Tuesday, July 28, 2026

Tamil grammar ~ Name board of a Shop

 

Nameboard of a shop in Tamil Nadu.

Don’t blame the owner; don’t blame the painter who made the signboard .. ..

 


தமிழ் இலக்கணம் : தமிழின் 18 மெய்யெழுத்துக்களில் : க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் வல்லெழுத்துகள் ஆகும். வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

 

Repost of 2020!! [taken near Thiruvattaru divyadesam]

Monday, July 6, 2026

what is ஆழாக்கு ! மல்லாக்கொட்டை !! – what is மானாவாரி சாகுபடி ??

 

The other day was at a posh shop ordered some eatables and Coffee though only a couple of items, the young educated girl at the counter, opened Calculator on her phone and totaled twice !!  .. .. .. a few minutes later, bought 10 odd vegetable items at a roadside vendor this time a old lady, said the value at once different vegetables, different rates, different quantities !!!

 


Are you a Gen Z kid  !  What do you see in this picture ??   What do you think will be the response if  you  asked to buy one azhakku of mallakkottai  .. what is  ஆழாக்கு and what is மல்லாக்கொட்டை  !! what is மானாவாரி சாகுபடி ?? 

பால், எண்ணெய் போன்ற திரவங்களையும், நெல் மற்றும் தானியங்களையும் மொண்டு (முகந்து) அளக்கும் முறைக்கு முகத்தலளவை என்று பெயர். 

ஆழாக்கு = அரைக்காற்படி.(எட்டு ஆழாக்கு ஒரு படி).  முகத்தல் என்றால் : மொள்ளுதல்; அளத்தல் ; தாங்கியெடுத்தல் ; விரும்புதல் ; நிரம்பப்பெறுதல் ; மணம் பார்த்தல். வேர்க்கடலை மாவடு போன்றவற்றை படி (கால் படி; அரைப்படி; 1 படி) எனவும்; வேப்பம் பூ போன்றவற்றை ஆழாக்கு என்ற அளவையிலும் விற்றார்கள் - நாம் வாங்கினோம் என்பது ஒரு புதிய தகவலாக இருக்கலாம். 

பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவை நெல்லிலக்கம் எனவும் வழங்கப்பட்டது. முகத்தல் அளவை உங்களை கொஞ்சம் ஈர்த்து இருந்தால் : படி - 4 படி கொண்டது, ஒரு மரக்கால். 6 மரக்கால் கொண்டது, ஒரு பறை.2 பறை கொண்டது, 1 கலம். 2 கலம் கொண்டது, 1 மூட்டை. 60 மரக்கால் கொண்டது, ஒரு உறை. கிலோ கற்கள் போன்றவை வருமுன்னர் காய்கறிகளை (பொருட்களை) எடை பார்க்க... கூழாங்கற்கள், நெல்மணிகள், குன்றிமணி, தெள்ளுக்காய், களர்ச்சிக்காய் போன்றவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். 

மணிலா பயிறு (நிலக்கடலை – ground nut) என்பது தமிழகத்தில் வறண்ட மற்றும் இறவைப் பாசன நிலங்களில் பரவலாகப் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துப்பயிராகும்.  நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை  (வட்டார வழக்குகளில், வேர்க்கடலை, கச்சான், மலாட்டை மற்றும் கலக்கா) என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. இதை தொடர்ச்சியாக  உண்பதால் வாழ்நாள் நீடிக்கும்.    

                   செடி அமைப்பைப் பொருத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கொத்து, அடர்கொத்து, கொடி என உள்ளது. பொதுவாக கொத்து ரகங்கள்தான் விவசாயிகளால் விரும்பப்படுகிறது. இவை 90 நாட்கள் முதல் 105 நாட்கள் வயது வரை உள்ளதாகும். பரவலாக கொடி கொட்டை என்பது திருவண்ணாமலை பகுதியில் மட்டும் சாகுபடியில் உள்ளது. நிலத்திற்கு அதற்கு ஏற்ப பவுடர் போல் நிலத்தில் உழவு அமைய வேண்டும். நிலக்கடலையில் மகசூல் அதிகரிக்க நிலத்தை தங்கம்போல் பராமரிக்க வேண்டும்.  

மானாவாரி சாகுபடி என்பது செயற்கை பாசனத்தை நம்பியிராமல், முற்றிலும் இயற்கை மழைநீரையே நம்பி செய்யப்படும் வேளாண்மை முறையாகும். தமிழ்நாட்டின் கோவில்பட்டி, ராமநாதபுரம் போன்ற வறண்ட பகுதிகளில் இப்பயிர்கள் பருவமழைக்காலத்தை (ஆடிப்பட்டம்) மட்டுமே சார்ந்து பயிரிடப்படுகின்றன.  

நிலக்கடலை விதைப்பிற்கு இயற்கை உரங்கள் அவசியம் தேவை. 30 நாட்களுக்கு முன்னர் நாட்டு கம்பினை ஏக்கருக்கு 10 கிலோ விதைப்பு செய்து இரண்டு அடி உயரம் இருக்கும் போது மடக்கி உழவு செய்து மணிலா சாகுபடி செய்தால் போதும்.விவசாயிகள்   70 மூடைகள் மகசூல் எடுத்துள்ளனர். கம்பில் வேர் முண்டுகள் அதிகம் இருப்பதால் மணிச்சத்து இயற்கை சத்து பூமிக்கு கிடைப்பதால் நிலக்கடலை மகசூல் கூடுகின்றது. சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், கார்த்திகைப்பட்டம் என்று உள்ளது. இதில் பரவலாக மார்கழிப் பட்டம்தான் அதிக அளவில் சாகுபடியில் உள்ளது.  ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள்;   ஒரு ஏக்கருக்கு 1,32,000 செடிகள்  பயிரிடப்படுகின்றன.     

 
Interesting ! did you feel that these are interesting facts not known to you earlier !!
 
Regards – S Sampathkumar
6.7.2026

 

Sunday, July 5, 2026

human bonding with animals !!!!

 

Man is a Social animal but is often seen fighting with all animals including humans – few centuries ago, Humans existed peacefully with animals allowing them space !! 

In the present day environ, Human–animal conflicts arise mainly because humans and animals compete for the same space and resources, and because human activities alter animal behaviour and habitats, increasing harmful encounters.  Some common causes include  :  Habitat loss and land-use change -  Conversion of forests and grasslands; Agricultural expansion and crop raiding; Competition for water and food during scarcity;  Population change and urbanization – and more …. But most of us would not admit – the human greed and avarice in eliminating many species !!

 


In India, often on roads and common places – you might witness strange, inexplicable, intricate bonding of animals with humans !!!  Moving away, here is a Sangam literature poem from Natrinai - one of the oldest   Tamil Sangam anthologies, belonging to the Ettuthokai collection. It contains 400 poems in the akam tradition, mostly on love, separation, reunion, and the emotions tied to landscapes.

 தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் குன்ற

வேங்கைக் கன்றொடு வதிந்தென,

துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி

கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,

வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்,

கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்  …..  ..

 

சங்க இலக்கியமான நற்றிணையின் 57-வது பாடல். பொதும்பில் கிழார் என்ற புலவர் இயற்றிய இப்பாடல், குறிஞ்சித் திணைக்குரியது. 

          In this Kurinji poem, a female monkey with her young is seen near the hill country. She quiets her noisy troop with her hands, goes close to a resting deer-cow, and squeezes out its sweet milk for her hungry young one.

          A mountain scene is described where a mother monkey, after calming her troop, steals sweet milk from a deer-like animal and feeds her child. The poem then continues into the love-poetic mood typical of Sangam kurinji verse, where the hill landscape mirrors the emotions of the human speakers 

Did you find this interesting !!  ~  "Compassion often survives where civilization claims it has disappeared."

 
Regards – S Sampathkumar
5.7.2025

 

Monday, June 22, 2026

illustrious sons of famous writer Sandilyan

'கடல் புறா' ~ illustrious sons of famous writer Sandilyan

 

இரவின் ஆரம்பத்தில், சந்திர ஒளி லேசாகப் பரவியிருந்த மந்தமான வெளிச்சத்தில், பெரும் பந்தங்களை இடது கையில் பற்றியும், வாளை வலது கையில் உயர ஏந்தியும், பயங்கரமான, பலவிதக் கூச்சல்களைப் போட்டுக்கொண்டும் சூறாவளி போல் வந்து கொண்டிருந்த களப்பிரர் கூட்டத்தைக் கண்டதும், அதை எதிர்க்க காஞ்சியின் காலாட்படையையும் புரவிப் படையையும் சுவர் போல இணைந்து நிற்க வைத்தான் குமாரன்.  

முதலில் காலாட்படைத் தலைவனை அழைத்து, “இது நகரமக்கள் சமீபத்தில் ஏற்படுத்திய படை. அதிக போர் அனுபவமில்லாதது. எதிரி வந்ததும் இவர்கள் தங்கள் வேல்களை எதிரிப்படையின் புரவியின் மீதும், புரவி வீரர்கள் மீதும் குறிபார்த்து ஒரேசமயத்தில் எறிந்துவிட்டுப் பின்வாங்கி விடட்டும். அவர்கள் காட்டுப் பகுதியை நோக்கிப் பின்வாங்கும் சமயத்தில் புரவிப்படை யுடன் முதலில் நான் மோதுவேன். பிறகு அதற்குள் ஊடுருவி முன்னேறுவேன். அதே சமயத்தில் பின்வாங்கிய உனது காலாட்படை முன்னேறி, பக்கவாட்டில் எதிரிகள் சிதறி ஓடுவதைத் தடுக்கட்டும். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று எச்சரித்து அனுப்பினான்.   களப்பிரர் சூறாவளி போல வந்தவர்கள், பத்தடிதூரத்துக்கு வந்ததும் எதிரிலே சுவர் போல் நின்ற காஞ்சி படையுடன் மோத வேண்டியதாயிற்று. அவர்கள் வாளைச் சுழற்றுவதற்கு முன்பாகவே அவர்களை நோக்கி காலாட் படையின் வேல்கள் பறந்தன. அவற்றால் தாக்குண்ட புரவிகள் அலறின. வேல்களுக்கு வீரர்கள் சிலரும் இலக்காகிப் புரவிகளிலிருந்து சரிந்தனர்.   

 

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070–1122) மற்றும் அவருடைய தளபதியான கருணாகரத் தொண்டைமான் காலக் கட்டத்தில் நடப்பதாக அமைந்த ஒரு மிக நல்ல புதினம். சோழர்களின் கடற்படை, தென் கிழக்கு ஆசிய நாடான ஸ்ரீவிஜயம் (இன்றைய இந்தோனேசியா/மலேசியா பகுதிகள்) மற்றும் கடாரம் மீது தொடுத்த போர்களை அடிப்படையாகக் கொண்டது.  அக்காலத்து சோழர்களின் கப்பல் கட்டும் முறை, திசையறி கருவிகள், கடல் நீரோட்டங்கள் பற்றிய துல்லியமான வர்ணனைகள் கொண்ட நாவல் கடல்புறா . 

'கடல் புறா' என்ற அதிநவீன போர் அலகுகள் கொண்ட சோழர் காலத்துக் கப்பல்!!   சோழப் பேரரசின் கடற்படை வலிமையையும், அவர்களின் கடல் கடந்த வெற்றிகளையும் மையமாகக் கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது.

Kadal Pura  is among the evergreen Novels in Tamil,  was initially written and serialised   in the popular Tamil magazine Kumudam before being compiled & published  as a complete set on March 1, 1967.   

Its author  -  Sandilyan (Sri Bashyam Iyengar 1910-1987)  was a celebrated pioneer of Tamil historical romance and adventure novels. Known for his vivid, gripping descriptions of ancient empires, wars, and politics—predominantly set during the Chola and Pandya eras—he was a legendary figure in Tamil literature.   His two sons were Professors.  Mr B Sadagopan taught me History & Political Science in early 1980s in DG Vaishnav College while Mr Krishnan was in Physics and rose to become Principal too.  

Chandilyan participated in   the freedom movement; worked as a  journalist and a screenwriter. He officially began writing his sweeping sagas in the 1950s. Understand that Sandilyan was connected with movies too initially.  During his time at the Hindustan Times he became friends with B N Reddy of Vijaya Studios and V. Nagayya.  He co-wrote the screenplays of films like Swarga Seema (1945) and En Veedu (1953). He later wrote about his film world experiences in his book Cinema Valarndha Kadhai (1985). Later he also produced a documentary titled "Birth of a Newspaper"; but writing novels was his forte.  His historical epics were widely published in popular Tamil weeklies and include:  Yavana Rani, Kadal Pura, Kanni maadam,  Mannan magal and more.  Though he passed away in Sept 1987, Sandilyan's literary impact remains strong, as he is still widely read by fans of historical fiction. 

Understand that Sandilyan’s father - Sri U.Ve.Srirangam Satagopa chariar was a famous Upanyasakar    


I had recently shared (repost) of  pic taken in  June  2016 – happy posing with respected Prof. B. Satagopan, Retd. Head of Dept. History & Politics, DG Vaishnav College,  son of legendary writer of historic novels late Shri Chandilyan .. taken at the time of visit of our Acharyar - Sri U Ve Koil Kanthadai Chandamarutham Singarachaar Swami at Thiruvallikkeni.  Mr Sadagopan is no more, passed away in July 2020. 

20th June 2026 provided me another opportunity to be with Sandilyan’s other illustrious son, a man who taught a tough subject with ease making students understand the love the subject.

In Academics -  Physics is considered fundamental because it uncovers the basic laws governing matter, energy, space, and time—the foundation upon which all other sciences build. It is seen as elite because  Physics requires "certain intellectual skills that the majority of [people] do not possess"—advanced mathematical reasoning, logical abstraction, and experimental design. The subject is "tough and nobody truly grasps everything"; courses like General Relativity are considered "for crazy people" due to their mathematical complexity

 


The man in this picture is Dr B. Krishnan, 77 years young now.  As I studied Economics (History / Political Science) taught by Mr B Sadagopan, Dr B Krishnan was the pillar of Physics Dept of DG Vaishnav College, he became the HoD of Physics Department and later became the Principal too, serving the great Educational institution for five years+ as Principal. He is recognized as one of the most prominent educators of Physics.  

… .. and with him is his spouse Mrs Bhooma Krishnan,  Economics graduate from Bombay university with PG in Vaishnavism, Divyaprabandham and Sanskrit, well versed in Vaishnava sampradhayam, who worked and retired from Life Insurance Corporation of India as Regional Manager IT.   Here is a picture of the couple taken at the function held at Triplicane on the occasion of visit of our Acharyar - Sri U Ve Kovil Kanthadai Chandamarutham   (Doddayachar) Yoga Nrusimha  Swami and a photo of Dr Krishnan receiving a book from our Acaryan.

 

Respects – S Sampathkumar / 22.6.2026
 

PS : those 2 paras at the start are from Sandilyan’s Historic novel – “Pallava Peedam” 

கதைக்களம் மற்றும் வரலாறு:

·         காலம்: கி.பி. 250 முதல் 300 வரையிலான ஆதிபல்லவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளது.

·         கதை மாந்தர்கள்: பல்லவபுரி (பல்லாரி) மன்னன் பப்பதேவன் குமாரனான 'சிவஸ்கந்தவர்மன்' (யுவமகாராஜா) மற்றும் களப்பிரர்களின் படையெடுப்பிலிருந்து காஞ்சிபுரத்தைக் காப்பாற்றிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.

·         நாவலின் சிறப்பம்சங்கள்:

·         தமிழ்நாட்டில் தலைகாட்டத் தொடங்கிய களப்பிரர்களின் கொடூரமான தாக்குதல்களையும், அதை முறியடிக்க பல்லவ மன்னர்கள் மேற்கொண்ட வீரதீர செயல்களையும் விவரிக்கிறது.

·         சாவி பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபோது தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது 


Saturday, June 13, 2026

'கடல் புறா' ~ me with Prof B Satagopan

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070–1122) மற்றும் அவருடைய தளபதியான கருணாகரத் தொண்டைமான் காலக் கட்டத்தில் நடப்பதாக அமைந்த ஒரு மிக நல்ல புதினம். சோழர்களின் கடற்படை, தென் கிழக்கு ஆசிய நாடான ஸ்ரீவிஜயம் (இன்றைய இந்தோனேசியா/மலேசியா பகுதிகள்) மற்றும் கடாரம் மீது தொடுத்த போர்களை அடிப்படையாகக் கொண்டது.  அக்காலத்து சோழர்களின் கப்பல் கட்டும் முறை, திசையறி கருவிகள், கடல் நீரோட்டங்கள் பற்றிய துல்லியமான வர்ணனைகள் கொண்ட நாவல் கடல்புறா . 

'கடல் புறா' என்ற அதிநவீன போர் அலகுகள் கொண்ட சோழர் காலத்துக் கப்பல்!!   சோழப் பேரரசின் கடற்படை வலிமையையும், அவர்களின் கடல் கடந்த வெற்றிகளையும் மையமாகக் கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது.

Kadal Pura  is among the evergreen Novels in Tamil,  was initially written and serialised   in the popular Tamil magazine Kumudam before being compiled & published  as a complete set on March 1, 1967.   

Its author  -  Sandilyan (Sri Bashyam Iyengar 1910-1987)  was a celebrated pioneer of Tamil historical romance and adventure novels. Known for his vivid, gripping descriptions of ancient empires, wars, and politics—predominantly set during the Chola and Pandya eras—he was a legendary figure in Tamil literature.   His two sons were Professors.  Mr B Sadagopan taught me History & Political Science in early 1980s in DG Vaishnav College while Mr Krishnan was in Physics and rose to become Principal too.  

Chandilyan participated in   the freedom movement; worked as a  journalist and a screenwriter. He officially began writing his sweeping sagas in the 1950s. His historical epics were widely published in popular Tamil weeklies and include:  Yavana Rani, Kadal Pura, Kanni maadam,  Mannan magal and more. Sandilyan's literary impact remains strong, as he is still widely read by fans of historical fiction.

 


Here is pic taken in  June  2016 – happy posing with respected Prof. B. Satagopan, Retd. Head of Dept. History & Politics, DG Vaishnav College,  son of legendary writer of historic novels late Shri Chandilyan .. taken at the time of visit of our Acharyar - Sri U Ve Koil Kanthadai Chandamarutham Singarachaar Swami at Thiruvallikkeni.  Mr Sadagopan is no more, passed away in July 2020.   

Understand that Sandilyan’s father - Sri U.Ve.Srirangam Satagopa chariar was a famous Upanyasakar  

 
Respects – S Sampathkumar / 13.6.2026
Repost of 2016.

Monday, May 25, 2026

Jack fruit and Sanga kala pulavar Uraiyur Aenicheri Muda Mosiyaar !!!

பழங்களிலே அற்புதமான இனிய சுவை கொண்டது பலா !  இன்று பலாப்பழம் படத்துடன் கொஞ்சம் தமிழ் !  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற சங்க கால புலவரை அறிவீரா !!

 


ஆய் ஆண்டிரன், கடையெழு வள்ளல்களுள் ஒருவர்,   ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிட்டுள்ளார் 

                      The jackfruit (Artocarpus heterophyllus), also known as the jack tree, is a species of tree in the fig, mulberry, and breadfruit family (Moraceae).  The fruits of the tree are so sweet and liked by everyone. 

முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் உள்ளது.    பலாவிற்கு பலவு, பலாசம், சக்கை, வருக்கை, ஏகாரவல்லி எனப்  பெயர்கள் உண்டு.  முக்கனிகளில் மிகவும் இனியது பலா.   தமிழ்நாட்டில் பலாப்பழ விளைச்சலில் முதலிடத்தில் இருப்பது கடலூர் மாவட்டம்தான். அதிலும் பண்ருட்டி பலாப்பழம் என்றால் தனிமதிப்புதான் 



ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி(குரங்கு) அம்மரத்தில் இரவலர் கட்டியிருந்த முழவினை (மத்தளம்) பலாப்பழம் என்று எண்ணித் தட்டியது. 

மன்றப் பலவின் மாச்சினை மந்தி

இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்

பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின், 
புறநானூறு 
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். 

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் சங்ககாலத் தமிழ் புலவர்களில் ஒருவர்.  அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்.'ஏணிச்சேரி' என்ற ஊரில் வாழ்ந்தவர், 'மோசி' என்ற இயற்பெயரைக் கொண்டவர். உறுப்புக் குறை (முடவர்) இருந்ததால் இப்பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. புறநானூறு மற்றும் பிற சங்க இலக்கியங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.  இவர் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை, ஆய் அண்டிரன், மற்றும் சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி ஆகிய மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவர்.இவர் பாடிய பாடல்கள் மூலம் அக்கால மன்னர்களின் வீரம், கொடைத்தன்மை, மற்றும் மக்களின் கலாச்சாரத்தை அறிய முடிகிறது.  ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் ஆவான் . இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். 

சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த உறையூரின் ஒரு பகுதியாக ‘ஏணிச்சேரி’ என்ற பகுதி விளங்கியது. ‘  தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உறையூர், சங்ககால முற்காலச் சோழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைநகரம். காவிரியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூர், பழங்காலத்தில் 'உறந்தை' மற்றும் 'கோழியூர்' என்றும் அழைக்கப்பட்டது.  

புறநானூறு எனும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூல். புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்றும் வழங்கப்படும். இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 160.  பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. 

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்   பாடிய பாடல்கள் 13 நமக்குக் கிடைத்துள்ளன. அவை  யாவுமே புறத்திணையைச் சேர்ந்தவை. இவை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுள் வைக்கப்பட்டுள்ளன.   ஆய் அண்டிரனை இவர் பாடிய விதத்தைப் பாராட்டி மற்றொரு புலவரான பெருஞ்சித்திரனார் “திருந்து மொழி மோசி பாடிய ஆய்” என்று பாடியுள்ளார்.

 
Regards – S Sampathkumar
25.5.2026
 

Tuesday, May 19, 2026

end of Kaliyuga ............. Paradesi !!

 

This morning saw this poster at few places in Triplicane ~ the blue coloured one shouting end of ‘Kaliyuga’ incidentally appears to have been posted over another poster of Chief Minister Mr Vijay and this is no political post  but more on the word ‘Paradesi’ stated !!

 


Kali Yuga is the fourth and final epoch in the repeating cosmic cycle of time (Yugas) within Hindu cosmology, often described as the "Age of Darkness," "Age of Vice," or "Iron Age". It is characterized by moral decline, spiritual ignorance, and societal chaos.            

                                According to traditional Vedic texts, Kali Yuga lasts for 432,000 years and began around 3102 BCE, shortly after the Kurukshetra War and the departure of Bhagwan Sri Krishna.   It is a time when dharma (righteousness) is reduced to a quarter of its original strength. Materialism, greed, hypocrisy, and conflict thrive, while spiritual pursuits are largely abandoned.   

According to the traditional calculations in Hindu cosmology, Kali Yuga will end in the year 428,899 CE, with roughly 426,870 years remaining !!  should we worry now, is for you to think !!

 

இந்து தொன்மவியலின்படி, நான்கு யுக சுழற்சியில் கடைசியாக வரக்கூடிய தற்போதைய காலகட்டம் கலியுகம்.  இது அதர்மம், அறியாமை, பேராசை மற்றும் ஆன்மீக வீழ்ச்சி நிறைந்த யுகமாகக் கருதப்படுகிறது. கலியுகம் மொத்தம் 4,32,000 ஆண்டுகள் நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.  பகவான் கிருஷ்ணரின் பூலோக மறைவுக்குப் பிறகு கலியுகம் தொடங்கியதாக மகாபாரதம் மற்றும் பாகவத புராணம் கூறுகின்றன. கலியுகத்தின் ஆரம்பக் கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.இறைவனின் அவதாரம்: கலியுகத்தில் அதர்மம் உச்சத்தை அடையும் போது, ​​அறத்தை நிலைநாட்ட விஷ்ணு பகவான் கல்கி அவதாரம் எடுப்பார் என்பது நம்பிக்கை.   

கலி புருஷன் - அதர்மம், பாவம், சண்டை, குழப்பம் மற்றும் தீய செயல்களின் உருவகமாக கருதப்படும் கலியுகத்தின் தேவதை. இவர் கலியுகத்தின் நாயகனாக அறியப்படுகிறார் மற்றும் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கியால் அழிக்கப்படுவார் என்று புராணங்கள் கூறுகின்றன.  கலியின் யுகம் என்பது பாபம் செய்தவர்களின் பூமியாக, தீய ஆதிக்கம் நிறைந்த, நேர்மையற்ற மற்றும் குழப்பம் மிக்க பூமியாக இருக்கும் என்பதினால் கலியுகம் என்ற பட்டப் பெயரை பெற்றது.  

இன்றைய காலகட்டத்தில் கலி யுகம் என்று அழியும், எப்படி அழியும், அந்த நாட்களில் வாழ்வது எவ்வளவு கடினமாக இருக்கும் போன்ற ஆராய்ச்சிகளில் நான் ஈடுபட போவதில்லை !!  இந்த போஸ்டரில் பறதேசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறு என நான் நினைக்கிறேன் ! - அது பரதேசி என்று இருக்க வேண்டும்.  

'பரதேசி' என்பது ஒருவர் வசிக்கும் ஊர் அல்லது நாட்டை விட்டு, வேறு ஒரு நாட்டிற்குச் செல்லும் வெளிநாட்டவரைக் குறிக்கும் சொல்லாகும். பொதுவாக, இது பிற தேசத்தைச் சேர்ந்தவர் (அன்னியன்) அல்லது பிழைப்புத் தேடி வெளியூர் சென்றவர்களைக் குறிக்கப் பயன்படுகிறது.மேலும் இச்சொல் : தேசயாத்திரை செய்பவர்.ஆன்மீகத் தேடலில் ஊர் ஊராகச் சுற்றும் துறவி போன்ற பொருட்களில் உபயோகிக்கப்படுகிறது..   

ஆனால்  பொதுவாக, பரதேசி என்பது யாசகம் பெறுபவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.   பரதேசம் (பிறதேசம்) என்ற சொல்லிலிருந்து பரதேசி என்ற இப்பெயர் வந்திருக்க வேண்டும். வடமொழியில் காணப்படும் பர்தேஸ் என்ற சொல்லுடன் இது இணையாக கருதப்படலாம். முந்தைய தமிழ் நூல்களில், ‘பரதேசி’ என்ற  சொல் பொதுவாகப் பிறநாடுகளிலிருந்து வந்து தமிழகக் கடற்கரைப் பட்டினங்களில் தங்கியிலிருந்து கடல் வணிகத்தில் ஈடுபட்டவர்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

 

Regards – S Sampathkumar

19.5.2026

Monday, May 18, 2026

cherished history of Chozha Kingdom evidenced by copper plates of Leiden !!!

 

"காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்

கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே!"

 

This morning, I had the opportunity to visit the Afsluitdijk and gain insight into the key features of this project !!  - read the tweet of our respected Prime Minister Shri Narendra Modiji – the nearly unpronounceable “Afsluitdijk” – made me search about it.  It is a lesser-discussed but strategically important issue for India: long-term water management and climate resilience.

 


The Afsluitdijk   is a major dam and causeway in the Netherlands. It was constructed between 1927 and 1932 and runs from Den Oever in North Holland province to the village of Zurich in Friesland province, over a length of 32 kilometres (20 mi) and a width of 90 metres (300 ft), at an initial height above Amsterdam Ordnance Datum of between 6.7 metres (22 ft) along the section at Friesland, and 7.4 metres (24 ft) where it crosses the deep channel of the Vlieter. The height at the greater sea depths west of Friesland was required to be a minimum of 7 metres everywhere when originally constructed. 

More searches from India are about ‘Leiden University’ -  founded in 1575, the oldest university in the Netherlands and ranking consistently among the top 100 global institutions. Located across two vibrant student cities—Leiden and The Hague—the public research university is highly regarded for its humanities, social sciences, law, and medicine programmes.  Established by William, Prince of Orange, with the historic motto Praesidium Libertatis (Bastion of Freedom).

 

Chudamani Vihara was a historic Mahayana Buddhist monastery at Nagapattinam in Tamil Nadu, built around 1006 CE with Srivijayan patronage and support from the Chola ruler Rajaraja I.  

The vihara was constructed in the early 11th century (around 1006 CE) by a Srivijayan/Sailendra prince (Cudamanivarman / Sri Mara Vijayattungavarman) with the patronage of Rajaraja Chola I. Anaimangalam is a village   in Kilvelur taluk of Nagapattinam district, Tamil Nadu, India, about 13 km west of Nagapattinam town and roughly 301 km from Chennai  Anaimangalam is historically linked to Chudamani Vihara because the Chola king Rajaraja I granted the village of Anaimangalam to support the upkeep and revenue of the Chudamani Vihara monastery at Nagapattinam

 


Now in global news are the  inscriptions on the Leiden / Anaimangalam copper plates - significant because they are one of the clearest primary records of Chola power, administration, religious pluralism, and overseas connections in the 11th century. 

        The charter has two major parts: a Sanskrit section giving the genealogy and divine ancestry of the Cholas, and a long Tamil section describing the reign and acts of Rajaraja Chola I. The Tamil portion records that in the 21st year of his reign, Rajaraja Chola I granted the entire revenue of the village of Anaimangalam to support a Buddhist monastery (Chudamani Vihara) at Nagapattinam. 

The famous Chozha Kings -  Rajaraja Chola I and Rajendra Chola I are known as devout Shaivites, yet here they endowed a Buddhist vihara, showing state patronage extended beyond their own sectarian identity.

This inscription is frequently cited as a concrete proof of religious coexistence in Chola Tamilakam, where Hindu kings funded Buddhist institutions for political, commercial, or cultural reasons as well as religious tolerance. 

These Copper plates - as a detailed land grant charter, the plates illuminate how villages were assigned, what kinds of tax revenues were diverted, and how permanent endowments to religious institutions were structured. Historians use such copper plate grants to reconstruct Chola fiscal policy, agrarian organization, and local governance, since they list boundaries, tax terms, and obligations in precise legal language. The plates note that the Chudamani Vihara at Nagapattinam was built by Sri Mara Vijayotunga Varman (also called Chudamani Varman), a ruler of the Srivijaya kingdom in present day Indonesia. 

        The genealogy and praise passages in Sanskrit place the Cholas in a cosmic and legendary lineage, which is valuable for studying royal ideology and how Chola kings fashioned their political legitimacy. Because these plates are among the most extensive and well preserved Chola copper plate charters, they are considered one of the most important pieces of Tamil epigraphic heritage outside India and now a key repatriated source for understanding the Chola golden age.

 

வெளிநாடுகள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி, அமீரகத்தை தொடர்ந்து  நெதர்லாந்து சென்றடைந்தார்.  அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்கு பிரதமர் மோடியின் முன்னிலையில், பிரசித்தி பெற்ற ஆனைமங்கலம் தாமிர தகடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இவை லெய்டன் தகடுகள் என அழைக்கப்படுகின்றன.

தென்னிந்திய அரசாட்சிகளில் ஒன்றான 11-ம் நூற்றாண்டு சோழ அரசாட்சி காலத்திலான இந்தக் கலை பொருட்கள் லெய்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டாக வைக்கப்பட்டு இருந்தன. மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, 2023ல் யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டால் இந்த செப்பேடுகள் திருப்பி தரப்பட்டுள்ளன. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,

 



"இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். 

நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

A joyous moment for every Indian! Chola Copper Plates dating back to the 11th Century  are being  repatriated to India from the Netherlands. Our PM took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten. The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, and relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I.  

 


Known as the Leiden Copper Plates, the royal charters had been preserved for over a century at the University’s Asian Library. The collection consists of 21 large and three small copper plates bound by a bronze ring bearing the seal of Chola king Rajendra Chola I. Five plates contain inscriptions in Sanskrit, while sixteen are inscribed in Tamil. Another set of plates, carrying the seal of Kulottunga Chola I, also contains Tamil inscriptions.  

 


The "Leiden copper plates"   comprises 21 plates bound by a bronze ring bearing Rājendra Chola I’s seal; another object (Or.1688) has three plates with the seal of Kulōttunga Chola I.  Here is factual reporting on how they reached there and why they are repatriated excerpted from Leiden University page titled :  Leiden University to return Chola Plates to India:  https://www.universiteitleiden.nl/en/news/2026/05/leiden-university-to-return-chola-plates-to-india   

The Chola Plates, currently in the possession of Leiden University, will be returned to India. This has been decided by the Executive Board. The restitution of this heritage follows the advice of the (national) Colonial Collections Committee. The Chola Plates – historical objects originating from India held by University Libraries Leiden (UBL) – will be presented on 16 May during a formal ceremony in the presence of Prime Minister Modi and Prime Minister Jetten in The Hague, and will be officially transferred to India at a later occasion.   

In the summer of 2023, the Indian government submitted a request to Leiden University to return the Chola Plates (object numbers Or.1687 and Or.1688), which are the property of the university and are held by the UBL.   

The copper Chola Plates originate from India and record important agreements about the right of a Buddhist shrine and a number of monasteries in Nagapattinam in India to the revenue of villages. One object (Or.1687) comprises 21 copper plates held together by a bronze ring bearing the seal of King Rājendra Chola I, who reigned in the 11th century. Five plates contain Sanskrit inscriptions, and the remaining 16 plates contain inscriptions in Tamil. The other object (Or. 1688) comprises three copper plates also held together by a bronze ring – this time bearing the seal of King Kulōttunga Chola I (who reigned from 1070 to 1120) – and containing Tamil inscriptions.  

The Chola Plates, which have been in the possession of Leiden University since 1862, are important sources of royal charters in South India. They also provide historical information about the relationship between the Chola and Srivijaya Empires, and have a combined weight of 30 kilos. The plates are available at the university library for academic research and teaching, and have been made available by the UBL for exhibitions.   

Provenance investigation :  Following India’s request in 2023 for the return of the Chola Plates, the university commissioned an independent provenance investigation by experts. It also sought advice from the Colonial Collections Committee, which conducted an additional investigation, while taking the results of earlier research into account. The national advisory committee on the return of cultural objects from the colonial context (i.e. the Colonial Collections Committee) was established by the Ministry of Education, Culture and Science and advises on requests for the return of cultural artefacts taken during the colonial era. By entrusting the committee with this task, the university committed to the outcome of the investigation. In its advisory report, issued to Leiden University at the end of 2025, the committee concluded that the Chola Plates should be returned to India.  

Colonial Collections Committee advice :  The provenance investigation demonstrated that the Chola Plates were most likely excavated during the construction of Fort Vijf Sinnen and the redevelopment of the site at the ‘Chinese’ Pagoda in Nagapattinam by the Dutch East Indies Company (VOC) between 1687 and 1700. At the time, Nagappattinam was a city in South India that had been captured by the VOC. It was subsequently used as a trading post and formed part of the colonial trade network of the VOC. The VOC exercised territorial authority in and around Nagapattinam.  

The committee has determined that the Chola Plates left the area without the consent of the owners or rights holders at the time. The Chola Plates were carefully buried in the ground, most likely to protect them during a period of upheaval.  The committee considers it likely that the objects were subsequently brought to the Netherlands in 1712 by the Camper-Kettinghs – Florentius Camper was a pastor in Batavia.  The exact circumstances under which the couple acquired the Chola Plates are uncertain. Their descendants donated the objects to Leiden University in 1862, where a relative, Hendrik Arent Hamaker, had been Professor of Eastern Languages until 1835. The committee has concluded that the removal of the objects from Nagapattinam in South India without the consent of the rights holders constitutes an involuntary loss of possession. It therefore advises the university to unconditionally return both sets of Chola Plates to India.  

On behalf of Leiden University, the UBL has consulted with the Indian Government about the timing (and manner) of the return. The official transfer of the Chola Plates to India will take place on a date after 16 May.  

So it is evident that : Florentius Camper (1675–1748) was a Dutch Protestant minister and missionary who lived and worked in Batavia (now Jakarta, Indonesia) and the East Indies in the early 1700s.  He acquired and moved these plates in a surreptious manner !!  transported   to the Netherlands around 1700.    After Florentius Camper’s death, the plates passed by inheritance to his descendants, including Johanna Camper. Johanna Camper was married to the Dutch orientalist Hendrik Arent Hamaker; through this family connection, the plates remained in private scholarly custody in the Netherlands. In 1862, the successors/descendants of Professor Hendrik Arent Hamaker donated the copper plates to Leiden University.         From then on, they formed part of the Asian collections of Leiden University Library, catalogued under numbers such as Or. 1687 and Or. 1688 and stored in secure conditions, mainly accessed by researchers.  

The Chola Plates now will go to the Archaeological Survey of India (ASI) in New Delhi. The ASI functions under the Indian Ministry of Culture as the chief institution for archaeological research and preservation in the country. The ASI will decide whether, and if so, where the objects will be exhibited to the public in India.  The University further added that UBL has maintained a policy concerning the return of contested heritage for several years and cooperates constructively when such requests arise. In doing so, it adheres as closely as possible to the national policy framework.  

The reality now :  Chudamani Vihara as a built structure no longer exists in its original form; its site is now built over, and nothing substantial of the ancient monastery stands above ground today. The vihara was in Nagapattinam town, on or near the coastal strip, where locals later referred to a ruined tower as the “Puduveli / Puduvelli Gopuram”, which scholars identified as part of the Chudamani Vihara complex. By the mid 19th century, the ruins were still visible, but the remaining structures were demolished in 1867; the stone and bricks were reused mainly for the construction of St Joseph’s College and other colonial era buildings in Nagapattinam. There is no standing temple or clearly marked monument called “Chudamani Vihara” in Nagapattinam; only historical references, inscriptions (Leiden plates), and recovered Buddha bronzes preserve its memory.  

If you were an avid reader of Kalki’s Ponniyin Selvan, concluding with some lines from the novel !  

        பூம்புகார் என்னும் காவிரிப் பட்டினத்தைக் கடல் கொள்ளை கொண்டு போய்விட்டது அல்லவா? அதற்குப் பிறகு சோழ வளநாட்டின் முக்கியத் துறைமுகப்பட்டினம் என்ற அந்தஸ்தை நாகைப்பட்டினம் நாளடைவில் அடைந்தது. பொன்னி நதி பாய்ந்த இயற்கை வளம் செறிந்திருந்த சோழ நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு கொள்ள எத்தனையோ அயல்நாட்டார் ஆவல் கொண்டிருந்தனர். பெரிய பெரிய மரக்கலங்களிலே வர்த்தகப் பண்டங்கள் வந்து இறங்கியபடி இருந்தன. முத்தும், மணியும், வைரமும், வாசனைத் திரவியங்களும் கப்பல்களில் வந்து இறங்கியதோடு அரபு நாட்டுக் குதிரைகளும் விற்பனைக்காக வந்து இறங்கின.

        ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனாரின் காலத்தில் நாகைப்பட்டினம் சிறந்த மணிமாட நகரமாயிருந்தது. அந்த நகரத்தைக் கண்ட நம்பி ஆரூரர்,

        "காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்

கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே!"

என்று வர்ணித்தார். கடல் நாகைக் காரோணத்தில் மேவியிருந்த காயாரோகணப் பெருமானிடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று கேட்டார் தெரியுமா? மற்ற ஊர்களிலே போலப் பொன்னும், மணியும், ஆடை ஆபரணங்களும் கேட்டதோடு, நாகைப்பட்டினத்திலே ஓர் உயர்ந்த சாதிக் குதிரையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

          "நம்பிதாமும் அந்நாட் போய்நாகைக் காரோணம்பாடி

அம்பொன்மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா"

ஆகியவை பெற்றுக்கொண்டு திருவாரூர் திரும்பிச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது.           நாகைப்பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய அரபு நாட்டுக் குதிரைகளைப் பார்த்ததும் நாயனாருக்கும் குதிரை ஏறிச் சவாரி செய்யவேண்டும் என்று தோன்றி விட்டது போலும்!           நாகைப்பட்டினத்தைப் பற்றிப் புராணம் வர்ணிப்பது ஒருபுறமிருக்க, சரித்திர பூர்வமான கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அந்நகரைப் பற்றிச் சொல்லியிருக்கின்றன.  "பல கோவில்களும், சத்திரங்களும், நீர் நிலைகளும், சோலைகளும், மாட மாளிகைகளும் நிறைந்த வீதிகளையுடைய நாகைப்பட்டினம்" என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் அந்நகரை வர்ணிக்கின்றன.

          அதே ஆனைமங்கலச் செப்பேடுகள், அந்நாளில் நாகைப்பட்டினத்தில் புகழ்பெற்று விளங்கிய சூடாமணி விஹாரம் என்னும் பௌத்த ஆலயத்தைப் பற்றியும், அதன் வரலாற்றையும் கூறுகின்றன.  

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில், நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விஹாரம் மிக முக்கியமான ஒரு வரலாற்றுப் பின்னணியாகவும், நாவலின் களமாகவும் இடம்பெற்றுள்ளது. இது ஒரு புத்த விகாரம் (துறவிகள் மடம்) ஆகும்.நாவலில் சூடாமணி விஹாரம்இடம்: நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு, காயமடைந்த அருள்மொழிவர்மன் (பொன்னியின் செல்வன்) உடல் நலம் தேறுவதற்காக இந்த விஹாரத்தில்தான் தங்கியிருப்பார். வந்தியத்தேவன், சேந்தன் அமுதன் மற்றும் பூங்குழலி ஆகியோர் அருள்மொழிவர்மனைச் சந்திக்க இந்த விஹாரத்திற்கு ரகசியமாக வருவார்கள்.

 
Interesting !
 
Regards – S Sampathkumar
17.5.2026