Search This Blog

Monday, December 8, 2025

Rufous Treepie ~ என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

Vasanthiyum Lakshmiyum Pinne Njaanum – a Malayalam movie  directed by Vinayan based on a screenplay by J. Pallassery hit the screens in 1999. The film featured Kalabhavan Mani, Kaveri, Praveena and Sai Kumar in lead roles.

The bird we see daily is Crow ! – ever seen a White Crow – from a distance, it looked a rust coated crow ~  ‘Kotri’ !!  - a local name for this bird  is derived from the typical call while other names include Handi Chancha and taka chor (="coin thief"). Ever seen a white Crow ?  - வெள்ளை காக்கா  ?? 

காகங்கள் இனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பறவை  இனங்கள் இருக்கின்றன.   பறவைகளில் கறுப்பு நிறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவன காகங்கள். கறுப்பு என்றாலே காகம், காகம் என்றாலே கறுப்பு என்று அறியப்படுகிறது...எனினும் மிகமிக அரிதாக காக்கைகளில் வெள்ளையான பறவைகளும் எப்போதாவது காணப்படுகின்றன...  வெள்ளை நிறத்தில் காக்கை இருப்பதற்குக் காரணம் Albino எனப்படும் நிற பிறழ்வு நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகும்.

என் மன வானில் அல்ல, வீட்டு மாடியில் சிறகடித்து சென்றது இந்த பறவை.  காக்கையைப் போன்ற அலகு, கருந்தலை, மஞ்சள் பழுப்பு  நிறவுடல், வெள்ளைப் பட்டைகளுள்ள இறக்கை, கருமுனை கொண்ட சாம்பல் நிற வால் உடைய பறவை. இந்தப் பறவை பல விதமான ஒலிகளை எழுப்புமாம்.  அவற்றில் சில காதுக்கு மிக இனிமையானதாகவும், சில சாதாரணமானதாகவும் சில நாராசமானதாகவும் இருக்கும். இது சில வினாடிகள் இறக்கையை அடித்துக் கொண்டு நேர் கோட்டிலும், பின்னர் சிறிது தூரம் இறக்கையை அடிக்காமல் விரித்து வைத்துக் கொண்டு அதே நேர் பாதையிலும் பறக்கும்.  



The rufous treepie (Dendrocitta vagabunda) is a treepie, native to the Indian Subcontinent and adjoining parts of Southeast Asia. It is a member of the crow family, Corvidae. It is long tailed and has loud musical calls making it very conspicuous. It is found commonly in open scrub, agricultural areas, forests as well as urban gardens. Like other corvids it is very adaptable, omnivorous and opportunistic in feeding.  The rufous treepie is primarily an arboreal omnivore feeding on fruits, nectar seeds,  invertebrates, small reptiles and the eggs and young of birds.  

வால் காக்கை (Rufous Treepie) என்பது காக்கைக் குடும்பத்திலுள்ள பறவைகளுள் ஒன்று. இது அரிகாடை என்றும் முக்குறுணி என்றும் மாம்பழத்தான் குருவி என்றும் கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கப்படும்.] நீண்ட வாலும் உரத்த இசைக் கூப்பாடும் (கோகீலா ... கோகீலா... என்ற தொனியில் இருக்கும்!!  என்கிறது விக்கிபீடியா)  இப்பறவை காக்கையைப் போலவே ஒரு அனைத்துண்ணி. இப்பறவையின் விலங்கியல் பெயர் டென்றொசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda)= ன் பொருள் மரங்கள் இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும்.  

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

********************

கல கல கலவென துள்ளிக் குதித்திடும்சின்னஞ்சிறு அலையே

என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கி விடும்

உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்

சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்

இந்த பிரபல தமிழ் பாடல்  - "என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே"   'காசி' திரைப்படத்தில்  இசைஞானி இளையராஜா இசையமைத்து,  ஹரிஹரன் பாடியது. இந்தப் பாடல் மனதின் உணர்வுகளையும், கதைகளையும் உருவகப்படுத்திச் சொல்லும் அற்புதமான வரிகளைக் கொண்டது.  

Kasi starring Vikram as blind village singer, directed by Vinayan released in 2001 made ripples.  It was a remake of the director's own Malayalam film Vasanthiyum Lakshmiyum Pinne Njaanum.

 
PS:  identified as Rufous treepie by Google images.
 

With regards – S. Sampathkumar
8.12.2025 

No comments:

Post a Comment