Search This Blog

Sunday, September 10, 2023

வெண்சங்கு கழுத்தோடு .... .. .. நான் கண்ட பொருள் கூறவா!

வெண்சங்கு கழுத்தோடு !  ?  !!

Conch (Sanghu) is a common name of a number of different medium-to-large-sized sea snails. Conch shells typically have a high spire and a noticeable siphonal canal (in other words, the shell comes to a noticeable point at both ends). 

தோட்டினையும் குழையினையும் அணிந்த பெருமான் என்று செங்காட்டங்குடி தலத்து பதிகத்து பாடல் ஒன்றினில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.  தோடுடைய செவியன் என்று ஒரு காதினில் தோட்டினை அணிந்த பெருமான் என்று தனது முதல் பதிகத்தினை தொடங்கிய திருஞானசம்பந்தர் மற்றொரு காதினில் வெண்சங்குக் குழையினை அணிந்துள்ளார் என்று உணர்த்துகின்றார்

நினைத்ததை முடிப்பவன் படத்து பாடலில் காதில் ரீங்காரமிடும் புலமைப்பித்தன்  வரிகள் :

வெண்சங்கு கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட - நான் கண்ட பொருள் கூறவா!

அது என்ன வெண்சங்கு கழுத்து .. .. பளீர் என்ற நிறம் !  - சங்கின் வளைவு போன்ற அமைப்புள்ளதாலும்,  மிருதுவான தொடுஉணர்வைக் கைகளுக்கு அளிப்பதாலும், சங்கைப் போன்றே மங்கலச் சின்னமான தாலி, தழையப்பெற்றிருப்பதாலும்,  பெண்களின் கழுத்திற்கு சங்கு உவமையாகக் கூறப்படுகிறது. !!!  என எங்கோ படித்தேன் !!

சங்குகள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கடலின் அடிமட்டத்தில் சுமார் 20 முதல் 25  அடி ஆழமுள்ள பகுதிகளில் வாழ்கின்றன.  இந்த இடங்கள் சங்குப் படுகைகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் பாறையோரத்தில் இருக்கும் திடமற்ற, மெல்லிய மணற் பகுதிகள் சங்குகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும்.  வெண் சங்கு (Xancus pyrum) கடல் நத்தை வகையைச் சேர்ந்த மெல்லுடலி ஆகும். இது வலம்புரிச் சங்கு எனவும்  தட்சணாமூர்த்திச் சங்கு எனவும் அழைக்கப்படுகிறது.

 


நான் பார்த்த படங்கள் மிக குறைவு - சிறு வயதில் சென்ற ஊர்களோ இன்னமும் குறைவு !  .. .. 1975ல் ஹோகேனேக்கல் சென்று குளித்து, தர்மபுரியில் தங்கி - ஏதோ திரையரங்கில் பார்த்த படம் : நினைத்தை முடிப்பவன்" - MGR படம்.  கதாநாயகன் ஒரு சாதாரணன் ! - திருமண ஊர்வலத்தில் இசைக்கருவி வாசிப்பது மட்டுமே தெரிந்தவன்.  அவன் லட்சியமே, தங்கையின் திருமணச் செலவுகளுக்காகப் பணம் சேர்ப்பது - தன சொந்த ஊரை விட்டு,  பட்டணத்திற்கு வந்து நாட்கள் பலவாகியும் வேலை கிடைக்காமல் சுற்றியலைகிறான்.  

திரு எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் - திரு  TM சௌந்தர்ராஜன் இசையில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல் :  

பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த - ஊர்வலம் நடக்கின்றது

எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் - நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது

மங்கள  , குங்குமம் சிரிக்கின்றது 





 If you are wondering, what this is all about ?  - this morning saw a cow (calf)  in Triplicane wearing a conch-dollar, yes – a real white conch around its neck.
 
With regards – S. Sampathkumar
10.9.2023 

No comments:

Post a Comment