குதிரைகள் உலகம் எளிது — எதிர்பார்ப்பு ஏதும் இல்லை!
போட்டி, பொறாமைகளும் இல்லை !! ~ இரும்பு
குதிரைகள் படித்துள்ளீர்களா !
கடற்கரை மணலைக் கிளப்பியபடி,
கட்டுப்பாடுகள் ஏதுமின்றிக் காற்றோடு போட்டியிட்டு ஓடும் மூன்று அழகிய குதிரைகள்… இலக்கு
எதுவென்று தெரியாது; ஆனால் அவற்றின் ஓட்டத்தில் வேகமும், கம்பீரமும், எல்லையற்ற சுதந்திரமும்
தெரிகின்றன!
Horses
pictured on the golden sands of Goa
! Galloping towards freedom
பாலகுமாரனின்
இரும்பு குதிரைகள் படித்துள்ளீர்களா ! பெயரைப்
பார்த்தால் குதிரைகளைப் பற்றிய நாவல் எனத் தோன்றலாம். ஆனால் இதன் களம் பெரும்பாலும் லாரிப் போக்குவரத்துத் தொழில். நெடுஞ்சாலைகளில் ஓயாது ஓடும் லாரிகள் ஒருபுறம்;
சுதந்திரம், கம்பீரம், மென்மை ஆகியவற்றின் உருவகமாக வரும் குதிரைக் கவிதைகள் மறுபுறம்!
பாலகுமாரனின்
புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று இரும்புக் குதிரைகள், 1984ஆம் ஆண்டில் கல்கி இதழில் தொடராக
வெளிவந்து, பின்னர் நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. லாரி நிறுவனத்தில் பணியாற்றும் விஸ்வநாதன்,
திரைத்துறையில் நுழையவும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் விரும்புகிறான். குடும்பப்
பொறுப்பு, அலுவலகச் சிக்கல்கள், மனித உறவுகள் ஆகியவற்றுக்கு இடையே சிக்கித் தவிக்கும்
அவனது மனப்போராட்டமே கதையின் மையம். சென்னை
தண்ணீர்த்தொட்டித் தெருவைச் சுற்றியுள்ள லாரிப் போக்குவரத்து உலகத்தைப் பின்னணியாகக்
கொண்டது. விபத்தில் சிக்கும் லாரிகள், காணாமல் போகும் சரக்கு, முதலாளிகள், ஓட்டுநர்கள்,
கிளீனர்கள், சரக்குத் தரகர்கள், காவல்துறை, சாலையோர மனிதர்கள் என நாம் சாதாரணமாக அறியாத
ஒரு பெரிய தொழில்சங்கிலியை பாலகுமாரன் கதையில் காட்டி இருந்தார். அந்தக் காலத்திய லாரித் தொழிலின் எழுதப்படாத விதிகள்,
சிறு ஊழல்கள், விசுவாசம், வஞ்சகம், அபாயம், மனித உழைப்பு ஆகியவை நுணுக்கமாகப் பதிவாகியுள்ளன.
வாழ்க்கை
மனிதன் மீது ஏற்றிவைக்கும் பாரங்களைச் சுமந்தபடி ஓடுபவன் விஸ்வநாதன்; அவனுக்குள் இருக்கும்
குதிரையோ கட்டுகளற்ற வெளியைத் தேடிக்கொண்டே இருக்கிறது. நம்மில் பலரும் விஸ்வநாதன்களே
- என்ன நாம் படும் கஷ்டங்கள் விடிவதுமில்லை .. அதை ரசனையாக எழுத, ஏன் காது குடுத்து
கேட்க மனிதரும் இல்லை.
கடற்கரை
மணல்வெளியில் தறி கேட்டு ஓடும் குதிரைகள் மனதிற்க்கு
ஏதோ இதத்தை அளிப்பது உண்மை !!
Regards – S Sampathkumar
3.9.2026

Yes I have read the Novel also
ReplyDeleteVery descriptive one