மனிதர்களில் பலர் - உடல் உபாதைகள் தவிர, மன உளைச்சலாலும் அவதி படுகின்றனர். உற்றார், உறவினர், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடத்திலும் வன்சொல், தவறான சொற்கள், ஏலாப் பொய்கள், என - வார்த்தைகள் மனிதர்கள் வாழ்வில் கெடுதிகள் செய்து கஷ்டப்படுத்துகின்றன.
அன்றொரு நாள் அந்த அற்புத திருக்கோவில் வாயிலில் ஒரு மஹானிடம் இந்த பிரச்னைகளுக்கு அருமருந்து தான் யாது என வினவினேன் ! - அவரோ ஒரு இடத்தை சுட்டிக்காட்டி விட்டு அகன்று விட்டார். அவ்விடத்தில், ஒரு வித்தியாசமான கோணத்தில், தன் புலன்களை, கால்களை அடக்கி ஒரு வெள்ளை பூனை அமர்ந்து இருந்தது.
வீடு திரும்பி யோசித்தால் - உணர்ந்தது - அந்த பூனை போன்று கோப தாபங்களை - அடக்கி, வீண் வார்த்தைகள் தவிர்த்து, அமைதியாக அமர்தலே - நல்வாழ்க்கைக்கு உதவும் !! செந்நாப்போதார் திருவள்ளுவ பெருந்தகை இதையே - 30 - வாய்மைஅதிகாரத்தில் - குறள் 297ல் உரைக்கின்றார்.
பொய்யாமை
பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
பொய்
சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும். பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று',எனப்
பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி
உரைப்பாரும் உளர்.
23.7.2025
.jpg)
No comments:
Post a Comment