Pages

Tuesday, November 1, 2022

rain drops on a leaf !!

 

கம்பர் வாழ்ந்த காலத்தில் மக்களின் சிறப்பு பற்றி ஒரு கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.  ஒரு மாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் தென்னந்தோப்பில் நீண்ட கீற்றுகளின் நிழலில் கம்பர் உலா சென்றாராம்.   உழவன் ஒருவன் கபிலை  ஏற்றத்தில் நீர் இறைத்துப் ஏனைய விவசாயிகள் தம் மனிவியுடன்  பாடிக் கொண்டிருந்தனர்.

“மூங்கில் இலைமேலே...” என்றான் முதல்வன்; இரண்டாமவன் - “தூங்கும் பனி நீரே...” என மற்றொரு உழவன்  . “தூங்கும் பனி நீரை...” எனும் பொது அந்தி இருள் சூழ்ந்தது. கம்பர் பாடலில் மனதை பறிகொடுத்து  அடுத்த வரி என்னவாக இருக்கும்? என யோசிக்க, மறுநாள் பாட்டை தொடர்ந்த உழவர்கள் -  வாங்கு கதிரோனே!"  என,   "என்ன அழகான  சொல் நயம்.   மூங்கில் இலையை, பனித்துளி சூரியனோடு   பொருத்திக் காட்டியது சிறப்பு .. .. என போற்றினாராம் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.. 

 


எமக்கு தொழில் கவிதை என முழங்கிய பாரதி வாழ்ந்த மண்ணில், வாழ்ந்தாலும், நமக்கு ஒரு வரி கவிதை கூட வராது !  - இன்று பெய்த மழையில் - புல்லின் மேல் தங்கிய மழை துளிகள் படம் .. .. .. .. 

No comments:

Post a Comment